20.2.2024 அன்று காலை 11 மணியள வில் பெரியார் பெருந்தொண்டர் சிவகங்கை மா.சந்திரன் அவர்களின் இளைய மகள் தோழர் கண்ணகி (வயது 43) சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் உடல் கூராய்வுக்கு பிறகு மாலை 5 மணியள வில் கண்ணகியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தாம்பரம் மாவட்ட, நகர திராவிடர் கழகம் சார்பில் தோழர் உடலுக்கு தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்.தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா. குணசேகரன் ஆகியோர் கருப்பு ஆடை போர்த்தி மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
மறைவு

Leave a Comment