தமிழுக்காகவும், தமிழர்தம் நலனுக்காகவும் அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் வழித்தோன்ற லாகிய உலகத் தமிழர்களின் பாதுகாவலராகிய தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உதவிட வேண்டி எழுதுகிறேன். அதனை நிறைவேற் றிட பரிந்துரை செய்வீர்கள் எனவும் நம்புகிறேன்.
கடந்த 2012 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரி பார்த்தவர்களில் பெரும்பாலோர் பணிக்கு சென்று விட்ட நிலையில் 2013ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றோரில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 13,000 பேருக்கு பணி வாய்ப்பு இதுவரை வழங்கப்படாமல் வயது முதிர்வை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்கள் பணியில் இருக்கும்போது இவர்களை மட்டும் மறுதேர்வு எழுதி நியமனம் பெற வேண்டுமென கருப்பு அரசாணையை (ஜி.ஓ.149) எடப்பாடி அரசு வெளியிட்டு துரோகம் இழைத்தது. இதனை தாங்களும் இது அநீதி என்று அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.
அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய மாண்புமிகு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கருப்பு அரசாணை 149அய் ரத்து செய்து விட்டு தேர்ச்சி பெற்று வேலைக்கு காத்துக் கொண்டி ருக்கும் எஞ்சிய அனைவருக்கும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி வழங்குவோம் என்று தேர்தல் வாக் குறுதி எண் 177இன்படி அறிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மீதும், தமிழ்நாடு மக்கள்மீதும் பற்றுக் கொண்டது போல் அவரது தனயனும் நிறைவேற்றித் தருவார் என்று நம்பி கடந்த
3 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். 30 முறை களுக்கு மேலாக அறப் போராட்டம், பட்டினிப் போராட்டம் நடத்தினோம். மாறாக அரசு பள்ளி களில் சுமார் 38,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் – எந்த சட்டத்தை அரசாணையை எதிர்த் தாரோ – அதே எடப் பாடியின் தொடர்ச்சியாக வெறும் 2222 பணியி டங்களை நிரப்பிட 4.2.2024 அன்று தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக 38,000 பணியிடங்கள் ஆசிரியர் பணியில் காலியாக உள்ளன. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் எளிய மக்களின் கல்வித் தரம் என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்காமல் அரசு பள்ளிகளை வஞ்சித்து தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதற்கு துணை போவதாக வெகு ஜன மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. பெருந் தலைவர் காமராஜர் “கடையனுக்கும் கடைத்தேற்றம்” எனும் நோக்கில் தெருவெங்கும் பள்ளிகளை திறந்து எளிய மக்களின் பிள்ளைகள் படித்து விழிப்புற வழிவகை செய்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணி யிடங்கள் 38,000 இருக்கும்போது 2222அய் மட்டும் நிரப்பினால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களின் நிலை என்னவாகும் என்பதை தங்களின் கவ னத்துக்கு கொண்டு வருகிறேன். எனவே, தகுதியுள்ள ஆசிரியர்களைக் கொண்டு கூடுதலான பணியிடங்களை நிரப்பி அரசு பள்ளி களையும், மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்த்திட பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
தமிழ் செம்மொழி தகுதி பெற்ற மொழி – மொழிவளம், இலக்கிய, இலக்கண வளம் உடைய ஆகச் சிறந்த பெரும் மொழி தொன்மையான மொழி – இம் மொழிப் பாடம் நடத்தும் தமிழாசிரியர்களை பணி நியமனம் செய்யாமல் சுமார் 8000 தமிழாசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு வெறும் 384 இடங்களை மட்டுமே நிரப்புவற்காகதேர்வு நடத்தப் பட்டுள்ளது. சுமார் 48,500 தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஜிணிஜி தேர்ச்சி பெற்றவர்கள் மறு தேர்வு எழுதியுள் ளார்கள். தமிழ் மொழிப் பாடத்தை வேறு பாடம் நடத்தும் ஆசிரியர்களை வைத்து நடத்தியதால் கடந்த 3 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு +2 தேர்வு களில் வெறும் 2 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்கள்.
எனவே, தமிழ்மொழியின் தொன்மையை வளமையை காக்கவும், தமிழை அழியாமல் பாதுகாக் கவும் காலியாக உள்ள 8,000 தமிழாசிரியர் பணி யிடங்களில் 25 சதவீத இடங்களுக்காவது கூடுதலாக பணி நியமனம் செய்து தமிழை பாதுகாக்க வேண்டு கிறேன். எங்கள் கோரிக்கையை தமிழ்நாடு முதல மைச்சர் கவனத்துக் கொண்டு சென்று தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிட பரிந்துரைக்க வேண்டு கிறேன்.
– எம்.எஸ். மணிதாகூர்
நிறுவனத் தலைவர்,அகில இந்திய அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்றக் கட்சி (சமூக இயக்கம்) தமிழ்நாடு