இன்று (6.10.2023) தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிற தஞ்சை புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (6.10.2023) காலை சரியாக 4:45 மணிக்கு தஞ்சை தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கி, காலை 5 மணிக்கு அரங்கத்தையும், கலைஞர் ஒளிப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார். திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், காப்பாளர் மு.அய்யனார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா. வெற்றிகுமார், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநகர துணை தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் கு.குட்டிமணி, ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணிகண்டன், ஒரத்தநாடு மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ், புதிய பேருந்து நிலையம் மேற்கு பகுதி செயலாளர் முனைவர் கி.சவுந்தரராஜன், தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார்செல்வம், அழகு.ராமகிருஷ்ணன், நிலவன் அறிவுச்செல்வன், ஆகியோர் உடன் இருந்தனர்.