விருப்ப மொழி பாடத்திலும் தேர்ச்சி தேவை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,பிப்.17- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரை 5 பாடங்கள் 500 மதிப் பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகின் றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப் பட்டு தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் வழங்கப் படுகின்றன.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தற்போது புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. அதாவது, விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட் டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் பள்ளிக் கல் வித்துறை இந்த மாற் றத்தை செய்துள்ளது.
புதிய அறிவிப்பின் படி, தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் இனி விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். விருப்பப் பாடங்களை எழுதக் கூடிய மாணவர்களுக்கு மட்டும் 6 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்க ளுக்கு தேர்வுகள் நடத்தப் படும்.

விருப்பப் பாடத்திற் கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள் ளிக்கல்வித்துறை அர சாணை வெளியிட்டுள் ளது. உருது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன் னடம் உள்ளிட்ட விருப் பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் இனி சான்றிதழில் அச்சிட்டு தரப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழைத் தாய்மொழி யாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ஆம் வகுப்பு மாணவர் கள் தற்போதுள்ள வழக் கப்படி 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும்.
நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடை முறையில் எந்த மாற்ற மும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடை முறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *