அறிவியல் துளி

2 Min Read

சூரியனைச் சுற்றும் பூமி

மேற்கத்திய உலகில் மதத்தின் பிடிமானம் ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைத்த உச்ச கட்ட காலம். 15ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அது. மத நூல்களில் சொல்லப்பட்ட செய்திகளை முற்றிலும் மறுத்து அறிவியல் உண்மைகள் வெடித்துக் கிளம்பிய காலம்.
இன்றைக்கு பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது எனச் சொன்னால், ‘அதில் என்ன வியப்பு?’ என கேட்கும் காலம். ஆனால், அந் நாளில் ‘பூமி நிலையாக இருக்கிறது; சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது’ என மத நுல்களில் குறிப்பிடப்பட்டவைகள்தான் உண்மை என நம்பப்பட்ட காலம்.
இப்படிப்பட்ட பொய்யை உடைத்து எறிந்து உண்மையைச் சொன்னவர் போலந்து நாட்டு கோபர் நிக்கஸ் (1473-1543). இந்த உண்மையைச் சொன்னதற்காக துன்புறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்து சாகடிக்கப் பட்டார் கோபர் நிக்கஸ்.

பின்னர் வந்த இத்தாலிய நாட்டு கலீலியோ (1564-1642), கோபர் நிக்கஸ் கண்டறிந்த மேலும் வானவியல் உண்மையை வலிந்து கூறினார். பல வானவியல் உண்மைகளைக் கண்டறிந்தார். டெலஸ்கோப் கருவியை வானவியல் ஆய்விற்காக மேலும் பயன்படும் வகையில் புதிதாக வடிவமைத்தார்.
வானவியல் உண்மைகளை மத நூல்களில் குறிப்பிடப்பட்டவற்றை மறுத்துப் பேசியதால் சிறையில் அடைக்கப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்டார். அவர் வலியுறுத்திய கருத்தான ‘பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது’ என்பதை திரும்பப் பெறுமாறு கொடுமைப்படுத்தப்பட்டார். ஒரு நிலையில் மதத்தின் பிடியில் இருந்த ஆட்சி அதிகாரம் விரும்பியவாறு கலிலியோ எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த கலிலி யோவை அவரது மாணாக்கர்கள் கோபித்துக் கொண்டனர். ‘ஒரு மாபெரும் வானவியல் உண்மையை தவறு என எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறீர்களே இது சரியல்ல!’ என கடிந்து கொள்ளவும் செய்தனர். மாணாக்கர்கள் அனை வரும் பேசி முடித்த பின்னர் கலீலியோ கூறினாராம்.
“நான் எழுதிக் கொடுத்துவிட்டால் மட்டும் – பூமியானது சூரியனைச் சுற்றி வருவது மாறி விடுமா? பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது; உண்மை உண்மைதான். நானல்ல, யார் மாற்றிச் சொன்னாலும் உண்மை மாறிவிடாது.” என்று தனது மாணாக்களுக்குக் கூறிய கலீலியோ மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து வானவியல் ஆய்வில் ஈடுபட்டு பல உண்மைகைளைக் கண்டறிந்துவிட்டுத்தான் காலமானார். உண்மையைச் சொல்வதில் கூட சூழலுக்கு உதவாத பிடிவாதம் தேவையில்லை என்பதை தனது வாழ்க்கைப் பாடமாகவும் எடுத்துக் கொண்டவர் கலீலியோ. கலீலியோ சிறையில் இருந்தபொழுது ஆட்சி அதிகாரத்திடம் பிடி வாதம் காட்டியிருந்தால், முன்னர் கோபர் நிக்கஸ்க்கு ஏற்பட்ட நிலைதான் அவ ருக்கும் ஏற்பட்டிருக்கும்.
இன்று பிப்ரவரி 15. கலீலியோ பிறந்த நாள் பொ.ஆ.(1564).
கிரேக்க நாட்டு தத்துவ அறிஞர் சாக்ரடீஸ், அரச தண்டனையால் ‘விஷம்’ கொடுத்து கொல் லப்பட்ட நாளும் பிப்ரவரி 15 (பெ.ஆ.மு. 399)
– நீட்சே

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *