தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

8 Min Read

“சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” விருது வழங்கி முதலமைச்சருக்கு தாய்க்கழகம் பாராட்டு

தஞ்சை, அக். 7- தாய்க் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில் 6.10.2023 அன்று  மாலை சிறப்பாக நடைபெற்றது.

புத்துணர்வு ஏற்படுத்திய இசை நிகழ்ச்சிகள்

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தெற்கு நத்தம் சித்தார்த் தன், இசைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம், உறந்தை கருங்குயில் கணேசன் ஆகியோரது இசை நிகழ்ச்சி நடை பெற்றது. தந்தை பெரியார், கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் பற்றி முனைவர் அதிரடி.அன்பழகன் அவர்கள் எழுதிய இன உணர்வு மிக்க பாடல்களும் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கொள்கை விருந்தாக பெரியார் கல்வி நிறுவனத்தின் கலை நிகழ்ச்சிகள்

பெரியார் கல்வி நிறுவனத்தின் சார்பில் கல்வி நிறுவன மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி பார்வை யாளர்கள் அனைவரையும் ஈர்த்தது. குறிப்பாக, தந்தை பெரியார் மீது அறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் கொண்டிருந்த பற்றை, பெரியாரின் கொள்கையை நினைவாக்க அவர்கள் எடுத்த முயற்சியை, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை சட்டமாக்கிய கலைஞரின் கொள்கை உறுதியை, கலைஞரின் மறைவுக்குப் பிறகு தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு சுடர் ஏந்தி நிற்பவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கேட்போரின் செவிகளுக்கும், பார்ப்போரின் கண்களுக்கும் கலை வடிவில் கொள்கை விருந்தாக அமைந்தது.

2006-இல் கலைஞர்; 

தற்போது நமது முதல்வர்

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வருகை புரிந்த அனைவரை யும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். 12.06.2006 அன்று இதே தஞ்சையில் திலகர் திடலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமாக நிறைவேற்றிக் கொடுத்த கலைஞருக்கு பாராட்டு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத் தார் என்பதை நினைவுப்படுத்தி, தாய்க் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்துள்ள முதலமைச்சர் அவர் களுக்கு நன்றி என்றார்.

தாய் வீட்டில் கலைஞர்

அரசியல்

நூறாண்டு கடந்தும் பேசுபொருளாக நிலைத்து நிற்க கூடிய வகையில் அமைந்த இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ் வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட “தாய் வீட்டில் கலைஞர்” நூல் வெளியிடப்பட்டது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நூலினை வெளியிட, பள் ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் நூலினை பெற்றுக் கொண்டார்.

வைகுண்டர் வழியில் வந்தவர்கள் நாங்கள்; வந்தேறிகள் இல்லை

நிகழ்வில் பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் பாராட் டுரை வழங்கினார். 

அவரது உரையில்; எப்படிப்பட்ட சூழலை எல்லாம் கடந்து, போராட்டத்தின் வழியாக குமரி முனையில் தமிழால், தமிழ் உணர்வால் அவர்கள் வாழ்ந்து வருகிறார் கள் என்பதை எல்லாம் விவரித்து, திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக போராடியதன் விளைவாகத் தான் தமிழை நாங்கள் தக்க வைத்துள்ளோம் என்றார். நாங்கள் வைகுண்டர் வழியில் வந்தவர்கள்; வந்தேறிகள் இல்லை! கைபர் போலான் கணவாய் வழியாகவும் வந்தவர்கள் இல்லை என்றார்.

தமிழ் தோன்றிய காலம் தொட்டு குமரியில் இருந்து வந்தவர்கள் என்றும், அவ்வளவு சிறப்பு வாய்ந்த குமரி மண்ணில் உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு சிலை வைத்தவர் தான் கலைஞர் என்றார். காலம் முழுவதும் வள்ளுவரை நினைக்கும் பெருமையை எங்களுக்கு தந்தவர் கலைஞர் என்றார்.

சுயமரியாதை சார்ந்த சமயம் தான் எங்களது சமயம் என்றும், அதன் வெளிப்பாடுதான் தோளில் துண்டு போடக் கூடாது என்று சொன்னபோது துண்டை தோளில் அணிந் தோம், இடுப்புக்கு கீழே துண்டு போகக்கூடாது என்று சொன்னபோது அதை தலையிலேயே எடுத்து கட்டினோம் என்றார். 

தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுடைய செயல் பாடுகளை எல்லாம் பாராட்டி, தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு தெய்வீக பேரவை” என்ற ஒரு அரசு சார்ந்த இயக்கத்தை தோற்றுவித்து அதன் தலை வராக தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களை நியமித்ததை நினைவு படுத்தி, அதன் முதல் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது என்றும், நெருக்கடி நிலையினால் அந்தப் பேரவை கலைக்கப் பட்டது என்றார்.

இன்று பாமர இந்து மக்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு அமைப்பு கிடையாது. அறியாமையில், மூடநம்பிக் கையில், ஆரிய மாயையில் அந்த மக்கள் சிக்கி தவிக்கின் றனர். அவர் களை அந்த அறியாமை, மூடநம்பிக்கை, ஆரிய மாயையில் இருந்து அகற்றக் கூடிய ஆற்றல் கலைஞருக்கு இருந்தது. இன்று அதை முதலமைச்சர் கையில் எடுக்க வேண்டும் என்றார். இந்த செயலை முதலமைச்சர் கையில் எடுத்தால், கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட இந்து மக்கள் அனைவரும் உங்களை பின்தொடர்வார்கள் என்றார். ஜாதி, மத பேதமற்ற சிந்தனையோடு முதலமைச்சர்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஜாதி, மத பேதமற்ற, அனைவருக்கும் பொதுவான ஆட்சி நடத்துகிறார் நம்முடைய முதலமைச்சர் என்றும், நூறாண்டு கண்ட கலைஞரின் புகழ் ஆயிரம் ஆண்டு கடந்தும் வாழ வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

அனைவரும் சமம் என்பதே நமது குணம்

அரசியல்

மேற்கு வங்க மேனாள் தலைமை செயலாளர் ஜி.பாலச் சந்திரன் அய்.ஏ.எஸ் அவர்கள் பாராட்டுரை வழங்கினார். அவரது உரையில்: எதை வேண்டுமானா லும் கேள்வி கேட்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் வழி. அந்த வகையில் எதற்கு கலைஞர் 100? எதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு? என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி தனது உரையை தொடங்கினார். 

250 ஆண்டுகளுக்கு முன்னால் ஆபிரகாம் லிங்கனுடைய வீர உரையில் அனைவரும் சமம் என்று அவர் முழங்கினார்.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே “பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவம் நமக்கு இருக்கிறது. 

இறைவனை கூட எதிர்த்து குரல் கேட்கும்  குணம் நம்மிடம் இருந்தது. இப்படி அனைவரும் சமம், கேள்வி கேட்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாம் 1000, 1500 ஆண்டுகளாக இல்லாமல் போகக் கூடிய நிலை, அப்படி மாறிய நிலைகளை மாற்றுவதற்காக தான் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் அனைவரும் போராடினர் என்றார். 

தமிழருக்கென்று தனியே ஒரு குணம் உண்டு என்று சொன்னால் அது அனைவரையும் சமமாக நினைக்கக் கூடிய குணமாக இருக்க வேண்டும் என்றார். சமமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு தேவை நிவாரணமும், நிரந்தர தீர்வும் தான். அந்த இரண்டையும் தந்தவர் கலைஞர் என்றார். 

அந்த வழியில் தான் ‘எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நான்தான் முதலமைச்சர்’ என்று வெற்றி பெற்ற முதல் நாளே நம்முடைய முதலமைச்சர் கூறினார் என்பதை நினைவுப்படுத்தி,  சொல்வதை கூட செய்ய முடியாமல் இருப்பவர்கள் மத்தியில் சொல்லாததையும் சேர்த்து செய்து கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றார்.

குறிப்பாக, இன்னும் 50 ஆண்டுகள் கழித்து பொருளா தார அறிஞர்கள் நிச்சயம் “காலை உணவுத் திட்டம்” என்பது எவ்வளவு பெரிய சமூக பொருளாதார புரட் சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று பேசுவார்கள் என்றார்.

இந்தியாவின் முதலமைச்சர்களில் முதன்மையானவர்

1969 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் மாநில அரசின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய ‘ராஜமன்னார் கமிட்டி’ அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த பரிந்துரைகள் அனைத்தும் மாநில சுயாட்சி பெற வேண்டும் என்று ஒரு மாநிலம் நினைக்கின்ற போது தேவைப்படக்கூடிய அதிமுக் கிய அறிக்கை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தார்.

குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஒன்றிய அரசு கொண்டுவர நினைக்கும் கொடுமையை எடுத்துரைத்து அதற்கு மாற்றாக “மாநில கல்விக் கொள்கை” ஒன்றினை நமது முதலமைச்சர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாநில கல்விக் கொள்கை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில சுயாட்சி பற்றி யாராவது பேச வந்தால் பேசுபொருளாக கூடிய கல்விக் கொள்கையாக நிச்சயம் அமையும் என்றார். அப்படிப்பட்ட ஒரு கல்விக் கொள்கையை தான் நாம் ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் வரலாற்றினை வென்றவர்கள் எழுதாமல், உண்மையை சொல்லுபவர் களால் எழுதப்பட வேண்டும். அப்படிப்பட்ட வரலாறாக முதலமைச் சரின் மாநில கல்விக் கொள்கை இருக்க வேண்டும் என்றார். இந்திய நாட்டில் உள்ள முதலமைச் சர்களில் முதன்மை முதலமைச்சர் என்ற பெருமை நமது முதலமைச்சருக்கு இருக்கிறது என்றும், அவரை சுற்றி இருப்பவர்கள் அவரது நோக்கத்திற்கு அவரைப் போலவே உழைத்தால் தெற்கு ஆசியாவின் முதன்மை யான மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் அதற்காக அவ ரோடு நாம் உழைக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

சமூக நீதிக்கான 

சரித்திர நாயகருக்கு நன்றி!

அரசியல்

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.அவரது உரையில்:  மிகச் சிறிய வயதில் தொடங்கி எப்படி படிப்படியாக நமது முதலமைச்சர் முன்னேறினார் என்பதை விவரித்தார்.

குறிப்பாக அகவை 30-இல் இளைஞரணி செயலாள ராகவும், 36-இல் சட்டமன்ற உறுப்பினராகவும், இன்று காலமெல்லாம் தளபதியாக திராவிட இயக்கத்தை காத்து நிற்கக் கூடியவராக வளர்ந்த விதத்தை விவரித்தார். கலைஞர் மறைந்த போது ‘அப்பா என்று ஒருமுறை அழைத்துக் கொள்ளவா தலைவா?’ என்ற அவரின் வார்த்தைகள் நம்மையெல்லாம் எவ்வளவு உணர்ச்சி வசப்படுத்தியது என்பதை எடுத்து ரைத்து, கலைஞருக்கு பிறகு திராவிட மாடல் அரசை முதல மைச்சர் நிறுவி இருக்கிறார் என்றார். 

நிகழ்ச்சியின் அரங்கம் தஞ்சை எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களின் பெயரில் அமைந்திருப்பதை மேற்கோள் காட்டி, நானும் வல்லத்துக்காரன் தான் என்று உரிமையோடு பேசினார். ஒரு சிறுபான்மையினர் மதத் தைச் சார்ந்தவனாக நான் உங்கள் முன்னாள் நிற்கிறேன் என்றும், கலைஞருக்கு பல லட்சம் சிறுபான்மையினர் கள் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம் என்றார். காரணம், சிறுபான்மையினர் மக்களுக்கு கலைஞர் செய்த திட்டங்கள் அவ்வளவு பெரியது என்பதை நினைவுப்படுத்தினார். 

அரசியல்

முதலமைச்சருடைய உரையில் அமைந்த  சமூக நீதி (Social Justice) என்ற வார்த்தை எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக, பொருளாதார, அர சியல் நீதி என்று இருப்பதை விளக்கி அடித்தட்டில் இருப்பவர் களுக்கு கல்வி வேலை வாய்ப்பு கொடுத்து சமூகநீதியையும், இல்லாதவர்களுக்கும் வேண்டியவர் களுக்கும் எல்லாம் கொடுத்து பொருளாதார நீதியை தந்தவர் கலைஞர் என்றார். சாமானிய மக்களையும், வேட்புமனு தாக்கல் செய்யக்கூட பணம் இல்லாமல் இருந்தவர்களையும் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப் பினர்களாக மாற்றி அழகு பார்த்து, அரசியல் நீதியை காப்பாற்றியவர் கலைஞர் என்றார். கலைஞர் பற்றிய கவிதையை முழுவதுமாக கூறி அந்த கவிதையின் ஒவ்வொரு வரிகளுக்கும் நம்முடைய முதலமைச்சர் எப்படி பொருந்தி இருக்கிறார் என்பதை எடுத்துரைத்து, டில்லிக்கு அடிபணிந்து செல்ல கூடியவர்களாக இல்லா மல், காலை உணவு திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்து, ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று சமூக நீதிக்கான சரித்திர நாயகராக இருக்கக் கூடிய முதல்வருக்கு நன்றி என்று நிறைவு செய்தார்.

வருகை தந்த அனைவருக்கும் தஞ்சை மாவட்ட கழகத் தின் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் இணைப்புரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *