குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெற வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்திட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

3 Min Read

சென்னை, பிப். 14- மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் ம.ம.க. தலைவர், சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை யில் பிப்ரவரி 7 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை தேனாம் பேட்டை காமராசர் அரங்கில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசப் நொலஸ்கோ உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் உட்பட 1728 பொதுக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு
கடந்த பத்தாண்டுகளாக ஒன்றி யத்தில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியினால் அரசமைப்புச்சட் டத்தின் விழுமியங்கள் பெரிதும் சிதைந்துள்ளன. ஜனநாயக நெறி முறைகளும் கருத்துச் சுதந்திரமும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
மோடி அரசு பெரும் முதலா ளிகளின் ஆதரவான பொருளாதார நிலைப்பாடு காரணமாக இந்திய மக்களின் 1 விழுக்காட்டினரின் செல்வம் நாட்டின் ஒட்டு மொத்தச் செல்வத்தில் 40.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தை மோடி அரசு கருத்தில் கொள்வதில்லை. மோடி ஆட்சி சிறுபான்மையினருக்கு விரோத மான ஆட்சி மட்டுமல்ல. ஜனநாய கத்தையும், சமதர்மத்தையும் விரும் பும் அனைவருக்கும் எதிரான ஆட்சி!
எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை, அதன் கூட் டணியைத் தோற்கடிக்க அனைத்து ஜனநாயக அரசியல் சக்திகளும் ஓரணியில் நின்று காந்தியார் கனவு கண்ட இந்தியா, தொடர்வதற்கு வழிவகுக்க வேண்டுமென இப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது

மக்களவைத்
தேர்தலில் ம.ம.க.கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட் டது. 2019இல் நடைபெற்ற மக்கள வைத் தேர்தலிலும், 2021இல் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பா ளர்கள் வெற்றி பெறுவதற்கு மனித நேய மக்கள் கட்சி அரும்பாடு பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மனித நேய மக்கள் கட்சி வெற்றி வாகை சூடியது. போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மமக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
“இந்தியா” கூட்டணியின் அங்க மான மனிதநேய மக்கள் சுட்சி தமிழ்நாடு முழுவதும் கூட்டணி யின் கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னிலை வகிக்கின்றது. எதிர்வரும் மக்கள வைத் தேர்தலில் திமுக கூட்டணி யில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை இப் பொதுக்குழு தலைமை நிர்வாகக் குழுவிற்கு வழங்குகிறது

குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும்
1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு மதம் ஓர் அடிப்படைக் கூறாக இல்லை. பாஜக அரசு கொண்டுவந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன் இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தடை செய்கிறது. மேலும் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் குடியுரிமை பற்றி கேள்விகளையும் எழுப்புகிறது. ஆகவே, அரசமைப் புச் சட்டத்திற்கு முரணான இக் கருப்புச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென இப் பொதுக்குழு கேகட்டுக் கொள் கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத் தைத் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்த மாட்டோம் என்ற தமிழ் நாட்டு முதலமைச்சரின் அறிவிப் பிற்கு இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் நடத்திடுக!
ஒன்றிய அரசு நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் உண்மையான தகவலை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டுமென இப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *