நேற்று (13.2.2024) சென்னை தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சைக்கிளிங் வீராங்கனை செல்வி இ.கலைச்செல்வி, மேலும் பலவேறு சாதனைகள் படைக்க உதவும் வகையில் ரூ.8.24 இலட்சம் மதிப்பிலான பந்தய சக்கர நாற்காலியை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர், அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.