மன்னார்குடி,பிப்.14- மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப்போட்டி 23.1.2024 செவ் வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மன்னார்குடி இராஜகோபால சாமி அரசினர் கலைக் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு பகுத்தறிவு ஆசிரி யரணி மாவட்டச் செயலாளர் இரா.கோபால் வர வேற்புரை ஆற்றி னார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன் தலைமை வகித்தார். மாவட்ட கழக தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், கழக மாவட்ட செயலாளர் கோ.கணேசன், கழக மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழ கன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டத்தலைவர் த.வீரமணி. கழக மாவட்ட துணை தலைவர் ந.இன்பக்கடல், பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத்தலைவர் கோவி.அழகிரி ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர் களை வாழ்த்தி மன்னார் குடி ராஜகோபால சாமி அரசினர் கலைக் கல்லூரி முதல்வர்.முனைவர் ராஜேந்திரன் வாழ்த்துரையில் இன்றைய காலகட்டத்தில் தந்தை பெரி யாருடைய தேவை எவ்வளவு அவசியமாக இருக்கிறது, தந்தை பெரியாருடைய கருத் துகள் பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டும் எனவும், தந்தை பெரியாருடைய பெயரில் பேச்சுப்போட்டி நடத்துவதன் மூலமாக இதனை செயலாக்க முடியும்.
இக்கால தலைமுறைகளுக்கு தந்தை பெரியாருடைய தத்துவங்களையும் சிந் தனைகளையும் கடத்துகிற மிக சிறப்பான ஒரு நிகழ்வை இந்த அமைப்பு இங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தந்தை பெரியாரை பற்றி முழு வதுமாக அறிந்து கொள்ள முடியும்.
ஜாதிய ஏற்றத்தாழ்வு மூலமாக ஏற்படு கின்ற ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும், ஜாதி பேதம் ஏதுமில்லாமல் சமத் துவ மனிதனாக மாணவர்கள் வாழ்வதற்கு கல்வி அறிவு பெருமளவு துணை புரியும் அந்தக் கல்வியை அனைவரும் பெற வேண்டும் என தந்தை பெரியார் பாடுபட் டார். அனைவரும் கல்வி பெற்று சுதந்திரமாக சுயமரியாதை பெற்ற மனிதனாக வாழ வேண்டும். என்பதற்காகவே தந்தை பெரியார் உழைத்தார்.
அவர் கருத்துகளை மாணவர்கள் படித்து உள்வாங்க வேண்டும் என்று, சிறப்பாக வாழ்த்திப் பேச்சுப் போட்டி யைத் தொடங்கி வைத்தார்கள்.
மன்னை இராஜகோபாலசாமி அரசினர் கலை கல்லூரி தமிழ்த்துறை உதவி பேரா சிரியர் முனைவர் சரவணன் ரமேஷ் மாண வர்கள் தந்தை பெரியார் சிந்தனைகளையும் கருத்துகளையும் கேட்டு பயன்பெற வேண் டும் என்று பாராட்டுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மன்னார்குடி பகுதியில் இருந்து 15 மாணவர்கள் பங்கேற்று பேச்சு போட்டியில் பேசினார்கள்.
அவர்களில் முதல் பரிசாக, ரூ.3000 மன்னை இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவி ம.பூந்தளிரும், இரண்டாம் பரிசாக ரூ.2000 செங்கமலத் தாயார் தன்னாட்சிக் கல்லூரி மாணவி
க.காவிய தர்ஷினியும், மூன்றாம் பரிசாக
ரூ. 1000 ஜா.ஜமிலாபாத்திமாவும் பரி சினைப் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 3000 பரிசினை ப.க. நகரத் தலைவர் கோவி.அழகிரியும், இரண் டாம் பரிசான ரூ. 2000 பரிசினை கழக மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழ கனும், ரூபாய் 1000 பரிசினை கழகப் பேச் சாளர் இராம. அன்பழகனும் வழங்கி சிறப் பித்தார்கள்.
போட்டிக்கு நடுவர்களாக ராஜ கோபால சாமி அரசினர் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் காமராஜர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.அறிவானந் தம், தலைமை ஆசிரியர் தங்க.வீரமணி யும் நடுவர்களாக இருந்து பங்குபெற்ற மாண வர்களில் இருந்து பங்கேற்றவர்களில் வெற்றி யாளர்களை தேர்வு செய்தார்கள்.
இறுதியில் மன்னை பகுத்தறிவாளர் கழக நகரத்தலைவர் கோவி.அழகிரி நன்றி கூறி னார். ப.க. மாநில அமைப்பாளர் சி.இரமேஷ். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.