தமிழ்நாட்டில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு கிடையாது
ஜேபி நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் உருவாக்காது
சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து
சென்னை, பிப்.12 தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லாத நிலையில் அக்கட்சியின் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 78வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய விடுதலை போராட்டத்திலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த சிங்காரவேலரை நினைவு நாளில் அவரை நினைவு கூறுகிறோம். விடு தலைப் போராட்டம் உள் ளிட்ட அனைத்துக்கும் அவர் போராடினார். மகத்தான தலைவர், கம்யூனிச கொள் கையை தமிழ்நாட்டில் பரப் பிய மூத்த தலைவர். மே தினத்தை சென்னை மெரினா கடற்கரை யில் கொண்டாடியவர்.
‘பாஜக வெற்றி – நாடே மோசமாகிவிடும்’
“இந்தியாவில் ஜாதி மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது. இந்தியாவில் மதவெறி சக்திகள் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்ற ஆபத்தான நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மதவெறி சக்திகள் கொக்கரிப் பது இந்திய மக்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். பாஜக வெற்றி பெற்றால் ஒட்டு மொத்த நாடும் மோசமாக மாறிவிடும்…””
“அண்ணாமலை பழைய இரும்பு வியாபாரி போல கூவி கூவி விற்றாலும் அவ ருக்கு தமிழ்நாட்டில் முகவரி இருக்காது. மக்களை பிளவு படுத்தும் அரசியலை பயன் படுத்தி நாட்டை காப்பாற்ற லாம் என்று பாஜக பார்க் கிறது. மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக் காது என்பதால் பாஜகவினர் ராமன் முகத்தை காட்டி ஓட்டு கேட்க பார்க்கிறார்கள்”
“பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் திமுகவுடன் தீவிர கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறும். பேச்சுவார்த்தையின் முடிவு சுமூகமாக அமையும்”
“கேரளா மற்றும் தமிழ் நாட்டில் ஆளுநரை வைத்து அரசியல் செய்ய பார்க்கி றார்கள். ஆனால், ஆளுநர் களால் எந்த அரசியல் மாற் றமும் ஏற்படாது. அத் வானியை ராமன் கோவிலுக்கு அழைக்கவில்லை என்பதால் அத்வானிக்கு ஆறுதல் பரிசாக பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.