சென்னை, பிப். 11- தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுவரை 25,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30,000 கோடி என்ற லட்சியத்தை அடைவோம். மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அவர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பூமாலை வளாகம் கட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வழங்க இலக்கு! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Leave a Comment