ஈரோடு சிக்கய்ய (நாய்க்கர்) கல்லூரி 1954இல் தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் மகாஜனக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கி சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி எனப் பெயர் மாற்றத்தோடு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் ஆயிரக்கணக் கான ஏழை, எளியவர்கள் வீட்டுக் குழந்தைகள் குறைந்த கட்டணத் தில் பயின்று வருகிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி இந்து, இஸ்லாம், கிறித்துவர் மற்றும் நாத்திகர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மாண வர்கள் பயிலும் கல்லூரியாக உட் பட அனைத்துத் தரப்பு மாணவர் கள் பயிலும் கல்லூரியாக இயங்கும் நிலையில்,
கல்லூரி வளாகத்தில் சிறிய கற்சிலை, சிதலமடைந்த சிறு கட்ட டம் ஒன்று இருக்கிறது. அதனை இந் துத்வா-ஜாதிவெறியை பின்பற் றும் சில பேராசிரியர்கள் – இந்துத் வாவை பின்பற்றும் சில வெளி அமைப்புகள் பின்னனியில் பெரிய கோவிலாகக் கட்டத்திட்டமிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கட்டாய வசூல் நடத்துவதாகவும் தெரிய வருகிறது.
சில பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைவிட மத வெறி, ஜாதி வெறியை மாணவர்கள் மத்தியில் தூண்டிவிடுவதாகவும் தெரிகிறது.
தமிழ்நாடு அரசும்-காவல்துறை யும் (உளவுத்துறை) கண்காணித்து இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டுவதைத் தடுத்து ஜாதி-மதக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட கல்லூரியான சிக்கய்ய (நாய்க்கர்) கல்லூரியில் இந்த அவலமா?
கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டினால் சட்ட ஒழுங்குப் பிரச் சினை ஈரோட்டில் ஏற்பட வாய்ப் பிருக்கும் என அஞ்சுகிறோம்.
– த.சண்முகம்
தலைமைக் கழக அமைப்பாளர்
திராவிடர் கழகம்)