சென்னை, நவ. 23- நரம்பியல் பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளுக்கு தனிப் பட்ட ஆதரவு தரப்பட வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தும் வகையில், டாக்டர் காமாட்சி நினைவு மருத் துவமனை பிரைவேட் லிமிடெட்டின் குழந்தை வளர்ச்சி மய்யம், “நரம் பியல் பிரச்சினைகளு டைய குழந்தைகளைக் கொண்டாடுதல்” என்ற தலைப்பிலான கருத்த ரங்கை அண்மையில் நடத்தியது.
இந்தக் கருத்தரங்கிற்கு மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் டி. ஜி. கோவிந்தராஜன், இயக்கு நர்கள் டாக்டர் ஜெயந்தி கோவிந்தராஜன், டாக் டர் சிவரஞ்சனி கோவிந்த ராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் அமர்வுகளில் நரம்பியல் பிரச்சினைகள் இன்று வளர்ந்து வரும் சவாலாகவும், குழந்தை களை வளர்ப்பதில் பெற் றோரின் திறன்வாய்ந்த பங்கு, சுய கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை விளக்கும் தலைப்புகள் இடம் பெற் றிருந்தன.
இதைத் தொடர்ந்து நிபுணர்களுடனான குழு கலந்துரையாடல் மற் றும் கூடியிருந்த பெற்றோ ரின் கேள்விகளுக்கு பதில ளிக்கும் அமர்வு நடத்தப் பட்டது.
இக்கருத்தரங்கில் டாக்டர் டி.ஜி. கோவிந்த ராஜன் கூறுகையில், “அனைவரையும் உள்ள டக்கிய பள்ளிகளில் கட் டுப்பாட்டை இழக்கும் குழந்தைகளை கையா ளும் உணர்வு அறைகள் இருக்க வேண்டும், இந்தக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட கல்வித் திட் டத்தை வழங்குவதற்கான சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் சிகிச்சையாளர் கள் இருக்க வேண்டும். நரம்பியல் பன்மைத் தன்மை கொண்ட குழந் தைகள் மற்றும் அவர்க ளின் பெற்றோர்களுக் கான ஆதரவு குழுக்கள், அமைப்புகள் அவசியம்” என்றார்.
நரம்பியல் பன்முகத் தன்மை கொண்ட குழந் தைகளைக் கொண்டாட வும், ஏற்றுக்கொள்ளவும், அரவணைக்கவும், அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைக்கவும் கைகோர்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இக்கருத்தரங்கு நிறைவ டைந்தது.