திருச்சி, பிப். 7- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூக பணித்துறை மற்றும் ஸ்கோப் அறக்கட்டளை சார் பில் குடும்ப வன்முறை தடுப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி மகளிர் மத்தி யில் மிக எழுச்சியாக நடந்தது. இரண்டாம் ஆண்டு சமூக பணித்துறை மாணவி செல்வி. லிடியா தேவகுமார் வரவேற் புரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஸ்கோப் அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜென்சி ஜோசப் தலைமை உரை வழங் கினார். இதில் தமுஏகசவின் மாவட்ட செயலாளர் மற்றும் வழக்குரைஞர் ரங்கராஜ் மகளிர் மத்தியில் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரை யில் குடும்ப வன்முறை பற்றி யும், அதன் சட்டங்கள் பற்றியும் கூறினார். மேலும் இலவச சட்ட ஆலோசனை மய்யத்தை பற்றி யும், அதன் நோக்கங்கள் பற்றி யும், எவ்வாறு நாம் சட்ட மய் யத்தை அணுக வேண்டும் என் பதை பற்றி மிக எளிமையாக அவர் தம் உரையில் எடுத்துரைத்தார்.
இறுதியாக இரண்டாம் ஆண்டு சுமூகபணித்துறை மாணவி செல்வி. வெற்றி நன்றி யுரை வழங்கினார். இதில் 55க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர். முனைவர் ஆனந்த் ஜெரால்டு செபாஸ் டின், இணை பேராசிரியர், சமூ கப்பணித்துறை இந்நிகழ்ச்சிகான ஆலோசனை வழங்கினார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் திருச்சியில் குடும்ப வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Leave a Comment