சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அதிரடி தகவல்

3 Min Read

 கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கேட்கும் இவர்கள் யார் தெரியுமா?
இந்த ஒன்பது பேர்வழிகளிடமிருந்தே 
ரூபாய் 200 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு !

அரசு, தமிழ்நாடு

சென்னை: அக் 10  “கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக முழுவிவரம் தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5,381.65 கோடி ரூபாய் அளவுக்கு திருக் கோயில் சொத்துகள் மீட்கப்பட் டுள்ளன” என்று இந்து சமய அற நிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (9.10.2023) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த மேனாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்களுக்கு துறை சார்ந்த அமைச் சர்கள் பதிலளித்தனர். 2023_20-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 

பின்னர், “தமிழ்நாடு விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ் வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழ் நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கருநாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி” தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் பேர வையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

முன்னதாக வினாக்கள் _ விடை நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ”“பண்ருட்டியில் 45 ஆண்டு காலத்துக்கு மேலாக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான கோயில் நிலத்தை தனிநபர் ஒருவர் குத்தகை என்கிற பெயரில் ஆக்கிரமித்து அனுபவித்து வைத்திருந் தார். பல ஆண்டுகள் பல முயற்சிகளை நான் மேற்கொண்ட போதும் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. நான் இந்த அவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தவுடன், அந்த இடம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழ் நாடு முதலமைச்சர் சட்டத்தின் ஆட்சி துணை கொண்டு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயிலுக்கு சொந்தமாக்கப்படும் என அமைச்சர் கடந்த கூட்டத் தொடரில் அறிவித்தார். தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தின் ஒரு பகுதியை மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பேருந்து நிலையம் அருகில் இருந்த மொத்தம் 6லு ஏக்கர் காலியிடத்தில் இரண்டரை ஏக்கர் மீட்கப்பட்டிருக் கிறது. மீதம் இருக்கின்ற 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் மீட்பதற்கு அமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “இந்த ஆட்சியைப் பொறுத்தளவில், கருத்து குருடர்களாக இருப்பவர் பலர் இந்து சமய அறநிலையத் துறை தமிழ் நாட்டிலே  ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் கூறிக் கொண் டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, 5,381.65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகளை குறிப்பாக, திருக்கோயில்கள் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற ஒரு பகுதியை சார்ந்த 9 நபர்களிடமிருந்து மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆட்சியில் சொத்துக்கள் மீட்கப்பட்டி ருக்கின்றன. ஆகவே, உறுப்பினர் வேல்முருகன் கடந்த ஆண்டு வைத்த கோரிக்கையை  நிறைவேற்றி இருக்கின் றோம். இப்போது வைத்திருக்கின்ற கோரிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு தமிழ் நாடு முதலமைச்சரின் உதவியோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *