சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேச
ஒட்டுமொத்த விமான சேவையையும் ரத்து செய்த பாஜக அரசு
ஜார்க்கண்டில் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, போதுமான சட்டமன்ற உறுப்பினர் ஆதரவும் இருந்த போதும் மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி கட்சியை உடைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது இதனைத் தடுக்க ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி போராடி வருகிறது
சட்டமன்ற உறுப்பினர்களை பேரம் பேசுவதைத் தடுக்க தங்களது உறுப்பினர்களை விமானத்தில் வேறு மாநிலத்திற்கு அழைத்துச் சென்று காப்பாற்றலாம் என ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சி நினைக்க – மோச மான வானிலை எனக்கூறி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனை அடுத்து விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியே வந்துள்ளனர். இவ்வாறு நடக்கும் என தெரியாததால் தற்போதைக்கு பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றி காப்பாற்றியுள்ள அக்கட்சி, பாதுகாப்பான இடம் கிடைக்காமல் தனது கட்சி அலுவலகத்திலேயே அனைவரையும் தங்க வைத்துள்ளது.
விமான நிலையத்திலேயே சில அதிகாரிகள் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் அடையாள அட்டைப் போன்றவற்றை கேட்டு மிரட்டல் பாணியில் பேசி உள்ளனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் நேற்றைய (1.2.2024) வானிலை எப்படி உள்ளது என்று அறிவதற்காக இணையதளத்தில் சென்று பார்வையிட்ட போது நேற்றைய வானிலை தொடர்பான விவரங்கள் மட்டும் நீக்கப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
விமானத்தில் ஏற்றிய பிறகு வானிலை சரியில்லை என்று கூறி விமானத்தை ரத்து செய்து சட்டமன்ற உறுப்பினர்கள் இறக்கி விடப்பட்ட அராஜகம்!