தஞ்சை, அக். 11- தஞ்சை மாவட்ட ப.க. செயலாளரும் தோழர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ வாழ்விணையருமான “ஆசிரியை பா.மலர்க்கொடி” 1-10-2023 அன்று மறைந்ததை விசாரிக்க இல்லத்திற்கு நேரில் வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மறைந்த அம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.
அவரை இழந்து வாடும் தோழர் பாவலர் பொன்னரசு மற்றும் தனது தாயை இழந்துவாடும் தோழர்கள் கபிலன், பேகன் ஆகி யோருக்கு ஆறுதல் கூறினார்.
நிகழ்வில் மாநில ப.க.துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க.து. தலைவர் ஜெ. பெரியார் கண்ணன், ஒன்றிய ப.க. செயலாளர் மா.இலக்குமணசாமி, மாநகர ப.க.செயலாளர் இரா.வீரகுமார், அம்மாப்பேட்டை ஒன் றிய ப.க.செயலாளர் ப.மாரிமுத்து, பேராசிரியர் முனைவர் மா.இராம சாமி, பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.