தஞ்சை, ஜன.31- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஜே.சரண்குமார் – தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா (26.1.2024) அணிவகுப்பில் கலந்துகொண்ட 9 மாணவர்களுள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவரும் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது.
சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார்
Leave a Comment