இந்தியாவில் 1912 ஆம் ஆண்டு வரை யாரும் தீண்டாமை ஒழிப்பு என்பதைப்பற்றி பேசியதே கிடையாது – அதை அரசியலில் கலக்கக் கூடாது, அதைப்பற்றி பேசக்கூடாது; அப்படி பேசினால், வாக்குகள் கிடைக்காது என்றனர்
1912 ஆம் ஆண்டே முதன்முதலில் தீண்டாமை ஒழிப்பு என்பதை மத்திய சட்டமன்றத்தில் குரல் எழுப்பியவர் பானகல் அரசர்!
சென்னை, நவ.23 இந்தியாவில் 1912 ஆம் ஆண்டு வரை யாரும் தீண்டாமை ஒழிப்பு என்பதைப்பற்றி பேசியதே கிடையாது, காங்கிரஸ்காரர்கள் உள்பட. இன்னுங்கேட்டால், அதை எதிர்த்தார்கள். அது சமூகப் பிரச்சினை – அதை அரசியலில் கலக்கக் கூடாது, அதைப்பற்றி பேசக்கூடாது; அப்படி பேசினால், வாக்குகள் கிடைக்காது என்று சொன்னார்கள். 1912 ஆம் ஆண்டே முதன்முதலில் தீண்டாமை ஒழிப்பு என்பதை மத்திய சட்டமன்றத்தில் குரல் எழுப்பியவர் பானகல் அரசர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழா!
கடந்த 20.11.2023 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் நடைபெற்ற ‘‘நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழா’’வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அதற்கடுத்து நண்பர்களே, சுப்பராயலு ரெட்டி யாருக்கு உடல்நிலை சரியில்லை என்று, பதவியை ராஜினாமா செய்கிறார். அந்த இடத்திற்குப் பானகல் அரசர் வருகிறார்.
பானகல் அரசர் மிகப்பெரிய அளவிற்கு வசதியானவர். 1920 ஆம் ஆண்டு அவர் பதவியேற்கிறார்.
அதற்கு முன்பே அவர் எவ்வளவு தகுதியானவர் என்பதற்கு அடையாளம் – மத்திய சட்டமன்றம் – சென்ட்ரல் லெஜிஸ்லேட்டிவ் அசெம்ப்ளி – அதில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் – 1912 ஆம் ஆண்டு.
இது பல பேருக்குத் தெரியாது. 1912 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்றால், இந்தியாவில் இதுவரையில் யாரும் தீண்டாமை ஒழிப்பு என்பதைப்பற்றி பேசியதே கிடையாது, காங்கிரஸ்காரர்கள் உள்பட. இன்னுங் கேட்டால், அதை எதிர்த்தார்கள். அது சமூகப் பிரச்சினை – அதை அரசியலில் கலக்கக் கூடாது, அதைப்பற்றி பேசக்கூடாது; அப்படி பேசினால், வாக்குகள் கிடைக்காது என்று சொன்னார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர்கள்
புதிய கோணத்தில் பல செய்திகளை எழுதவேண்டும்!
ஆய்வு செய்தால்தான் பல விஷயங்கள் தெரிய வரும். இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிப்பது மட்டுமல்ல – எல்லோரிடமும் பரப்பவேண்டும்; பரப்புவதற்கு முன் விவாதிக்கவேண்டும். வர லாற்றில் அதனைப் பதிவு செய்யவேண்டும். வர லாற்றுப் பேராசிரியர்கள் அதனை மய்யப்படுத்தி, பல புதிய கோணத்தில், பல செய்திகளை எழுதவேண்டும். அதற்காகத்தான் இதை நான் எடுத்துச் சொல்கிறேன்.
1912 ஆம் ஆண்டு முதன்முதலில் தீண்டாமை ஒழிப்பு என்பதை மத்திய சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
”Caste Pride Battles for
Equality in Hindu India’’
இதோ என் கைகளில் இருப்பது இப்பொழுது புதிதாக வந்திருக்கின்ற Manoj Mitta எழுதிய ‘‘Caste Pride Battles for Equality in Hindu India” என்ற தலைப்பில் உள்ள புத்தகம்.
அந்தப் புத்தகத்தில் பல அரிய தகவல்கள் உள்ளன. அதில் ஒரு பகுதியை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
தாதாபாய் நவ்ரோஜி என்பவர்தான் முதன்முதலில் தனி நபர் மசோதாவாக – தீண்டாமை ஒழிப்பு மசோதா வைக் கொண்டு வந்தபோது. சுரேந்திரநாத் பானர்ஜி, மதன்மோகன் மாளவியா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளு மன்றத்தில் உரையாற்றும்பொழுது இதுபோன்ற செய்தி களையெல்லாம் பதிவு செய்யவேண்டும்.
‘‘விஸ்வகர்மா யோஜனா’’ என்கிற ‘‘மனுதர்ம யோஜனா’’ திட்டம் ஆபத்தானது!
ஏனென்றால், இப்பொழுது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ‘‘விஸ்வகர்மா யோஜனா” என்கிற ‘‘மனுதர்ம யோஜனா” திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் சொல்லவில்லை என்றால், ஒருவருக்கும் தெரிந்திருக்காது.
For all his accomplishments in the Imperial Legislative Council from 1901 till his death in 1915. G.K. Gokhale never directly raised the issue of caste or untouchability in the one forum where he could at least have attempted to bring about legal and administrative changes. The closest he came to dealing with caste in the legislature was in the context of his prolonged campaign seeking elementary education for all.
In the midst of this apathy, suddenly, on 16 March 1916, India found its own John Quincy Adams, someone who broke the silence in the legislature on untouchability. Maneckji Byramji Dadabhoy was an unlikely candidate to have ended Dadabhai Naoroji’s virtual embargo of three decades ago. A Bombay-born barrister and industrialist and a councillor for the Central Provinces, Dadabhoy was a Parsi. So, like fellow Parsi Dadabhai Naoroji, he too might have had little exposure to caste prejudice, a deficiency that the Grand Old Man of India had cited to avoid the subject.
Still, not being a Congress member, Dadabhoy had little reason to defer to Naoroji’s policy. Maneckji Dadabhoy moved a resolution in the Imperial Legislative Council on ‘Depressed Classes’, the official term at the time for untouchables. It made two recommendations to the administration of Viceroy Lord Hardinge. One was that a committee of officials and non-officials be appointed to come up with measures for ‘amelioration’ in the condition of the Depressed Classes. Two, that, as ‘a preliminary step’, the provincial governments be invited to ‘formulate schemes with due regard to local conditions’.
Dadabhoy’s resolution led to the first-ever discussion in the national legislature on untouchability.2 The discussion took place in the chamber that now serves as the Delhi Legislative Assembly, located in Civil Lines, which is to the north of the subsequently built New Delhi.
Though the government declined to appoint the proposed committee, it expressed sympathy for the object of the resolution and promised to write to provincial governments as requested. The fact that the government had committed to such an unprecedented initiative persuaded Dadabhoy to comply with its suggestion that he withdraw the resolution. And as the Centre did make the promised beginning, Dadabhoy’s initiative led to data collection throughout British India on a hitherto unexplored subject.
Dadabhoy’s attempt to shine a light on the bottom layer of the Hindu hierarchy had met with resistance from two eminent Indian councillors, which explained why the government had declined to set up the committee that he had proposed. Surendra Nath 2 Banerjea and Madan Mohan Malaviya had been presidents of the Indian National Congress. While Banerjea had held that post twice, in 1895 and 1902, Malaviya had held it once, in 1909, and went again two years later, in 1918, and for the last time in
on to do so
1932. These Congress stalwarts took umbrage not so much at the substance of the resolution as to what they believed was Dadabhoy’s unwarranted attack on their religious community.
The next participant in the debate was Panaganti Rama Rayaningar, better known as the Raja of Panagal, who would go on to lead the Justice Party government in Madras in 1921. In a more unprecedented in British India, Rayaningar provided reservation in government jobs and educational institutions in the Madras Presidency for all non-Brahmins, including the Depressed Classes.
In fact, even while responding to Dadabhoy’s resolution in 1916, Rayaningar made a case for reservations. ‘Sir, it will not do to consider their claims to educational facilities and to public appointments along with those of the other sections of the community. Regard for the special needs of minorities is one of the accepted principles of this Government. The special treatment of the Depressed Classes will not therefore involve any serious violation of policy.’
Claiming that ‘I wanted to move a Resolution about it myself, Rayaningar recalled that when he had raised a question about the Depressed Classes in the Council in 1913, the government’s reply was ‘disappointing’. Reason: ‘They refused to show the members of the Depressed Classes any special consideration in the matter, even of appointment to the low paid public offices. If that attitude continues, there is little hope of progress, but I hope in the interest of the country better counsels now prevail.’
As for the state of Depressed Classes in his own province; Rayaningar reinforced Dadabhoy’s point about unapproachability. ‘Some of them are not even allowed to enter public places. Their movements on the public way are not free and unrestricted.’ The ‘social rigours’ were so harsh that, to escape them, some oppressed people were driven to embracing other religions, he said.
Rayaningar then made a distinction between the theory and practice of Hinduism. ‘Are we Hindus so dead even to our own interests, that we are not prepared to entertain kindlier feelings towards Depressed Classes, and would much rather lose than keep them among us by humane treatment? Can it be believed that the elevation of the Depressed Classes is repugnant to the sublime principles of the Hindu religion, or it was the intention of the ancient lawgivers that they should be permanently kept out of the common rights of humanity?
இதன் தமிழாக்கம் வருமாறு:
மேற்குறிப்பிட்ட ஆங்கிலப் புத்தகப் பக்கங்களின் தமிழாக்கம்:
காங்கிரசு கட்சியின் தலைவரான கோபாலகிருஷ்ண கோகலே பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய சட்டப் பேரவையில் 1901ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்தார். 1915ஆம் ஆண்டில் இறக்கும் வரை அந்த அவையின் உறுப்பினராகத் தொடர்ந்த அவர் ஜாதிய பாகுபாட்டைப் பற்றியோ, தீண்டாமைக் கொடுமை பற்றியோ ஒரு முறைகூட அவைகளை எதிர்த்து கருத்தும் தெரிவிக்கவில்லை; அதற்கான முயற்சியைக் கூட அவர் முன்னெடுக்கவில்லை. ஜாதிய அமைப்பு முறை குறித்து அவர் நெருக்கமாகச் சட்டப் பேரவையில் பேசியது ஒரு விசயம் பற்றி மட்டும்தான்; அனைவருக்கும் தொடக்கக் கல்வி அளித்திட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தபோது மட்டும்தான்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து இப்படியான அக்கறையின்மை நிலவிய நேரத்தில், ஒருவர் தீண் டாமை பற்றி அதுவரை அக்கறையில்லாத அமைதி நிலையினை எதிர்த்துச் சட்டப் பேரவையில் 1916ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் நாளில் பேசிட முன்வந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தாதாபாய் நவு ரோஜிக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிப்படையற்ற தடை யினை தகர்த்திட இன்னொரு தாதாபாய் ஆக மானக்கி பைராம்ஜி தாதாபாய் என ஒருவர் கிளம்பினார். பார்சி வகுப்பினைச் சார்ந்த, பம்பாயில் பிறந்து வளர்ந்து பாரிஸ்டர், தொழில் அதிபர் மற்றும் மத்திய – மாநிலப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். ஜாதி அமைப்பு குறித்து குறைந்த அளவு சார்பு நிலை கொண்ட அவர், இந்தியாவின் மூத்த தலைவர் தாதாபாய் நவுரோஜி போன்று ஜாதி அமைப்பு குறித்து பேசிடவே கூடாது என்ற நிலையில் இல்லை.
காங்கிரசுக் கட்சியின் உறுப்பினரல்லாத பைராம்ஜி தாதாபாய், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து மத்திய சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அன்றைய வைஸ்ராய் ஹார்டிங்கே அவர் களுக்கு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தார்.
ஒன்று: ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலிவு நீக்கும் வழிமுறைகளை கண்டறிய அதிகாரிகளையும், பொது வாழ்க்கையில் இருந்தோரையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
அடுத்தது: மாநிலப் பகுதியில் இருக்கும் அரசு நிர்வாகம் அந்தந்த பகுதியில் நிலவிடும் சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்திடும் அதிகாரமளிப்பது தொடர் நிலைப் பணியாக இருக்க வேண்டும்.
தாதாபாய் அவர்களது தீண்டாமை பற்றிய தீர்மானம் தான் நாடு தழுவிய பிரதிநிதித்துவம் உள்ள சட்டப் பேரவையில் முதலாவதாக இருந்தது.
இந்த தீர்மானத்தை பிரிட்டிஷ் இந்திய அரசு நிராகரித்த போதிலும், தீண்டாமை குறித்த தீர்மான நோக்கம் குறித்து அக்கறை காட்டியது. தீர்மானத்தில் கேட்டுக் கொண்டபடி ராஜதானி அரசுகளுக்கு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தது. அப்படி அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்கப்பட்ட காரணத்தால்தான் தாதாபாய் தமது தீர்மானத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்த உறுதி அளிப்பின் தொடர் பணியாக தாதாபாய் அவர்கள் செய்த முயற்சி, நாடு தழுவிய அளவில் பிரிட்டிஷ் இந்தியாவில் அது வரை சேகரிக்கப்படாத புள்ளி விவரங்களை சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்து சமூகப் படிநிலையின் அடிநிலை மட்டத்தில் தாதாபாய் அவர்களது முயற்சி ஒளி வீசிடச் செய்தது. ஆனால், இரண்டு திறமைசாலிகளான உறுப்பினர்களின் தடுத்தாளும் நிலையினை நேர் கொள்வதாக இருந்தது. அந்த இருவரின் எதிர்ப்பு காரணமாக தீண்டாமை குறித்து குழு அமைக்கப்படவில்லை. அந்த இருவர் – சுரேந்திரநாத் பானர்ஜியும், மதன் மோகன் மாளவி யாவும்தான். அந்த இருவரும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களாக இருந்தவர்கள். பானர்ஜி இரண்டு முறையும் (1895 & 1902), மாளவியா இரண்டு முறையும் (1909 & 1918) தலைவர்களாக இருந்தார்கள். அந்த காங்கிரசு தலைவர்கள், தீண்டாமை எதிர்ப்பு பற்றிய தீர்மானத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதை விட, தாதாபாய் அவசியமே இல்லாமல் தங்களின் மதம் குறித்துத் தாக்குவதாகவே எடுத்துக் கொண்டனர்.
தீண்டாமை எதிர்ப்பு குறித்த விவாதத்தில் பங்கேற்ற அடுத்த உறுப்பினர் பனங்கண்டி ராமராய நிங்காரு அவர்கள். பானகல் அரசர் எனப் பரவலாக அறியப்பட்ட அவர் 1921ஆம் ஆண்டில் சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆட்சிக்கு தலைமை வகித்தார். பிரிட்ஷ் இந்தியாவில் முன்நிகழ்வு எதுவுமில்லாமல், சென்னை ராஜதானி அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சேர்த்து பார்ப்பனரல்லாத மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட வழிவகுத்தார்.
1916இல் தாதாபாய் அவர்களது தீர்மானத்தின் மீது கருத்து தெரிவிக்கையில் ராமராய நிங்காரு இடஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிறப்பு வாய்ப்புகளை அரசின் வேலைத் திட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதிட முடியாது!
பானகல் அரசர் பேசியதாவது:
“(இந்து) சமூகத்தின் மற்ற பிரிவினர்களுக்கு மட்டும் கல்வி வாய்ப்பும், அரசு வேலை வாய்ப்பும் கிடைத்தால் போதாது. சிறுபான்மையினர் களுக்கான சிறப்பு வாய்ப்புகள் அரசின் ஏற்கப்பட்ட கொள்கைகளாகவே உள்ளன. எனவே, ஒடுக்கப் பட்ட மக்களுக்கான சிறப்பு வாய்ப்புகளை அரசின் வேலைத் திட்டத்திற்கு புறம்பானதாகக் கருதிட முடியாது.”
இது குறித்து தானே ஒரு தீர்மானத்தை முன்மொழிந் திட விரும்பினார். ‘‘1913ஆம் ஆண்டில் மத்திய சட்டப் பேரவையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானவை குறித்து தான் தொடுத்த கேள்விக்கு, அரசு அளித்த பதில் ‘ஏமாற்றம்தான்’.”
காரணம்: “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு சிறப்பு வாய்ப்புகளை வழங்கிட அரசு மறுத்து விட்டது. அரசுப் பணிகளில் அடிநிலையில் பணியாற்றிடும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இத்தகைய போக்கு அரசாங்கத்திற்கு இருக்கும் வரையில், முன்னேற்றம் காண்பதற்கு இடமில்லை. ஆனால், இப்பொழுது இருக்கும் நிலைமைகள் மேம்பட, நாட்டு நலனில் அக்கறை ஏற்பட உரிய ஆலோசனைகளைப் பெற்றிட வேண்டும்.”
தனது சென்னை ராஜதானியில் ஒடுக்கப்பட்ட மக்களது நிலைமைகளில், ‘நெடுங்காலம்‘ இழிவு நிலை குறித்து தாதாபாய் அவர்களது கருத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் ராமராய நிங்காரு உரையாற்றினார்.
“ஒடுக்கப்பட்ட மக்களில் சிலர் பொது இடங்களில் நுழைவதற்கே அனுமதி இல்லாத நிலை உள்ளது. பொதுப் பாதைகளில் அவர்கள் நடந்து செல்ல உரிமை இல்லை; இப்படிப்பட்ட சமூகக் கொடுமைகளிலிருந்து தப்பித்திட, அடக்கப்பட்ட மக்களில் சிலர் மற்ற மதங்களைத் தழுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்து மதத்தில் உள்ள கோட்பாட்டிற்கும், நடை முறைக்கும் உள்ள வேறுபாடு குறித்து ராமராய நிங்காரு விளக்கினார்.
“இந்து மக்களாகிய நாம், நமது நலன்கள் மாய்ந்திட காரணமாகவா இருப்போம்?”
“ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அன்பான அணுகு முறைக்கு நாம் தயாராக இல்லை; மனிதாபிமான நடவடிக்கைகளால் அம்மக்களை நம்மிடம் தக்க வைத்துக் கொள்வதைவிட, அவர்களை இழந்து விடும் நிலையில் இருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்ந்த நிலை என்பது இந்து மதத்தின் விழுமிய கோட்பாடுகளுக்கு எதிரானதாக உள்ளது என்பதை நம்பிட முடியுமா? அல்லது தொன்மைக்கால முதலான சட்டத்தினை வழங்கியவர்களின் எண்ணம், ஒடுக்கப் பட்ட மக்கள் மானுட பொது உரிமை பெறும் வட்டத்திற்கு வெளியில்தான் இருக்க வேண்டும் என்பதாகுமா?”
இதுபோன்ற அரிய தகவல்கள் அந்தப் புத்தகத்தில் உள்ளது.
மற்ற செய்திகளை நம்முடைய தோழர்கள் இங்கே சொல்லவிருக்கிறார்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியை பார்ப்பனர்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறார்கள்?
இன்றைய சூழ்நிலையில், நம்முடைய முதலமைச்சர் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சியை ஏன் பார்ப் பனர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்?
கோவிலில் இருக்கக்கூடிய சிலைகள் எல்லாம் வெளி யில் போனால் சிலைகள்; உள்ளே இருந்தால் கடவுள்கள். கடத்தப்பட்டால் சிலைகள்; உள்ளே இருந்தால் கடவுள்.
கடத்தப்பட்டது கடவுள் என்று சொன்னால், அவர் களுக்கு அவமானம் என்பதால், கடத்தப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். வேறு எந்த மதத்துக்காரர் களுடைய கடவுள்களையும் கடத்த முடியாது. இந்து மதத்துக்காரர்களின் கடவுள்களை மட்டும்தான் கடத்திக் கொண்டு போகிறார்கள்.
மதுரையில் ஓர் அம்மையார்
புலம்பியிருக்கிறார்
அந்த சிலைகள் எல்லாம் விற்கப்படுகின்றன; பண மாக்கப்படுகின்றன. அந்தப் பணம் யாரிடம் போகிறது என்று தெரியவில்லை என்று மதுரையில் ஓர் அம்மையார் புலம்பியிருக்கிறார்கள்.
அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய இடத்தில் அந்த அம்மையார் இருக்கிறார்கள் அல்லவா! ஏனென்றால், அந்த அம்மையார் ஒன்றிய அரசினுடைய நிதியமைச்சர். எல்லாத் துறைகளையும் அவர்கள்தானே கைகளில் வைத்திருக்கிறார்கள்.
இரண்டவதாக உள்நாட்டில் பணம் பண்ணுகிறார்கள் என்றால்கூட தமிழ்நாடு அரசு கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல்லலாம். வெளிநாடுகளில் போய் பணம் பண்ணி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.
வெளிநாடுகளில் போய் விசாரணை செய்வது யாரால் முடியும்? ஒன்றிய அரசின் துறைகள் ஒத்துழைத் தாலொழிய வெளிநாடுகளில் சென்று விசாரணை செய்வதற்கான வாய்ப்பே கிடையாது.
அந்த கடத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் ஒன்று கப்பலில் போயிருக்கவேண்டும்; அல்லது விமானத்தில் கொண்டு போய் இருக்கவேண்டும். நடந்து போயிருக்க முடியாது, நிச்சயமாக.
இங்கே செய்தியாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள் – அந்த அம்மையாரின் வருத்தம் நியாயமானதுதான்; உடனே கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுங் கள். அப்படியென்றால், கோளாறு எங்கே இருக்கிறது? ஒன்றிய அரசில்தானே!
அப்படி கடத்தப்பட்ட சிலைகளைக் கொண்டு வரும் வேலையைத்தானே ‘திராவிட மாடல்’ அரசு செய்கிறது. அப்படி செய்கின்ற ஆட்சியையே விமர்சிக்கின்றார்கள்.
‘‘கோவில்களெல்லாம் எங்கள் வசம் வரவேண்டும்” என்று சொல்கிறார்கள்.
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டம் –
நீதிக்கட்சி ஆட்சியின் பெருமை!
இந்தியாவிற்கே வழி காட்டக்கூடிய ஒரு சட் டத்தை – இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறை சட்டத்தை கொண்டு வந்த பெருமை பானகல் அரசருக்கு – திராவிட இயக்கத்திற்கு உண்டு.
பானகல் அரசர் அந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஓராண்டு, ஈராண்டு அல்ல – ஆறாண்டுகளாகப் போராடினார்.
அதுபற்றி சுருக்கமாகக் கூறுகிறேன்.
‘‘சமூகத்தில் நிலவும் இதை விட மிக மோசமான சமூக அநீதி என்னவென்றால், பொது நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட கிணறுகள், குளங்கள், சாலை ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்துவதைத் தடை செய்திருப்பதுதான். இந்த மாகாணத்தில் உள்ள பார்ப்பன அமைப்பான ‘தர்ம ரட்சக சபா’ என்ற அமைப்பில் இது போன்று சமூக விதிகள் திரித்துக் கூறப்படுகின்றன. இந்த அமைப்பின் நோக்கமே, பார்ப்பனரல்லாதவர்கள் அளித்த அறக்கட்டளைகளினால் உருவான கோயில்கள், சத்திரங்களின் நிருவாகத்தை பார்ப்பன வழக்குரைஞர்களுக்கும் அவர்களால் நியமிக்கப் படுபவர்களுக்கும் மாற்றி அளிப்பதுதான். இத் தகைய அறக்கட்டளைகளின் நிருவாகம், அவற்றை உருவாக்க நிதி அளித்த சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்களிடமே அளிக்கப்பட வேண் டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
இது வரை நாம் கூறியவற்றிலிருந்தே, இந்த நாட்டை நிருவாகம் செய்து வரும் ஆங்கிலேய அரசு பழைமை வாத சனாதன தர்மத்தின் செல் வாக்கின்கீழ், அரசின் அனைத்துச் செயல்பாடு களிலும் சுயநல உணர்வினை ஊட்டி, ஆங்கிலே யரின் கொள்கைகளின் அனைத்து வடிவங்களை யும் பின்பற்றி வருகிறது என்பதுதெளிவாகத் தெரிகிறது. இந்த சனாதன தர்ம உணர்வுதான் இந்தியத் திருமணங்களில் மதச் சடங்குகளை நீக்குவதற்காக பேரரசரின் சட்ட கவுன்சிலில் மதிப் பிற்குரிய பூபேந்திரநாத் குப்தா அறிமுகப்படுத்திய மசோதாவை நிறைவேற்றவிடாமல் குறுக்கே நின்றதாகும். இந்த சனாதன தர்ம உணர்வு படைத் தவர்கள்தான் பொதுப் பணிகளிலும், பொது அமைப்புகளிலும் மற்ற சமூகத்தினர் முன்னேற்றம் அடைவதற்குத் தடை செய்பவர்கள் ஆவர்.
சட்டமன்றத்தில் கடுமையான
எதிர்ப்புக் கிளம்பியது
அறநிலையப் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. பார்ப்பனத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மதத்தில் தலையிடுவ தாகக் கூக்குரல் எழுப்பினர். ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ ஏடுகள் இது குறித்துக் கண்டனம் தெரிவித்துத் தலையங்கம் எழுதின. இந்த மசோதாவை எதிர்த்து சத்திய மூர்த்தி அய்யர் ஆவேசத்தோடு பேசினார்.
‘‘நீதிக்கட்சியினர் பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட் டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட் டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாச மின்றி கட்சிப் பாகுபாடு இன்றி ஒரு மனதாக எதிர்க்க வேண்டும்.”
சத்தியமூர்த்தி அய்யரின் இந்தப் பேச்சு பதிவானதே தவிர அதற்கு வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. இத்தகைய எதிர்ப்புகளைப் பற்றி கவலைப் படாமல் முதல் அமைச்சர் பானகல் அரசர் மசோதாவை நிறைவேற்றுவதிலேயே கருத்தாக இருந்தார்.
சட்டமன்றத்தில் இம்மசோதாவை நிறைவேற்று வதற்குத் தமக்கு துணையாக என்.கோபாலசாமி அய்யங்காரைச் சிறப்பு உறுப்பினராக பானகல் அரசர் நியமித்து கொண்டார்.
ஆங்கிலத்தில் அவரது பதவியை ‘எக்ஸ்பர்ட் மெம்பர்’ என்று கூறினார்.
அவரைத்தான் பானகல் அரசர் எக்ஸ்பர்ட் மெம்பராக அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர நியமித்துக் கொண்டார்.
இதற்காகப் பானகல் அரசர் வைசிராய் இர்வினி டமும் வாதாட வேண்டியிருந்தது. மேலும் எல் லாரும் வியப்படையும் படியாகப் பானகல் அரசர் ஒரு செயலினைச் செய்தார். அறநிலையப் பாது காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு துறை அமைக் கப்பட்டவுடன் அதன் முதல் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சர். டி.சதாசிவ அய்யரை நியமனம் செய்தார். பானகல் அரசர் கோபாலசாமி அய்யங் காரையும் சாதசிவ அய்யரையும் பயன்படுத்திக் கொண்ட செய்தி – அறநிலையப் பாதுகாப்பு துறை அமைக்கப்பட்டதற்கான எதிர்ப்பை குறைக்க உத வியது. ஒரு பார்ப்பனரைத் தலைவராக நியமித்தது – மதத்திற்கு ஆபத்து என்கிற அபவாதத்தைப் போக்கியது.
தந்தை பெரியார், பானகல் அரசரை, இந்து அறநிலைப் பாதுகாப்புச் சட்டத்தை வரவேற்றார்
ஆனால், அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி பெருத்த சர்ச்சைக்கிடையே தான் நிறை வேற்றியது. நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை யில் (1920 – 1923) கொண்டு வரப்பட்ட மசோதா, இரண்டாவது அமைச்சரவையில் (1923 – 1926) தான் நிறைவேற்றப்பட்டது. இதற்காக இரண்டு முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும் தந்தை பெரியார், பானகல் அரசரை, இந்து அறநிலைப் பாதுகாப்பு சட்டத்தை வரவேற்றார். பகிரங்கமாக கட்சி வேறுபாடு பற்றிக் கவலைப்படாமல் பாராட்டி னார்.
19ஆம் நூற்றாண்டு மத்தியில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்திய ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட போது விக்டோரியா மகாராணியார் இந்திய மக்களுக்கு ‘மதத்தில் தலையிடுவதில்லை’ என்கிற உறுதியை வழங்கினார். இது கோவில் நிர்வாகத் தைப் பார்க்கும் சுரண்டல் பேர் வழிகளுக்கு வசதி யாகப் போய்விட்டது. ஆனால், கோவில்களைப் பற்றிய புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசு சட்ட சம்மதத்துடன் அறநிலையச் சட்டம் 1863இல் நிறைவேற்றியது. இதற்காக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை. அரசோ அதன் பிரகடனப்படி மதத்தில் தலையிடவில்லை. இந்நிலை நீதிக்கட்சிக் காலம் வரை நீடித்தது.
நீதிக்கட்சியினர் கூட்டிய மாநாடுகளில் இதைப் பற்றிய விவாதங்கள் நடந்து வந்தன. பார்ப்பனர் அல்லாதாரின் மடங்கள் நல்ல நிலைக்கு உயர்த் தப்பட வேண்டுமானால் அதற்குச் சட்டம் இயற்றப் பட வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இப்பிரச்சினை மாகாண அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்தது. எனவே சென்னை மாகாண அரசு 1922ஆம் ஆண்டு ஒரு மசோதா வைத் தயாரிக்கத் தனிக் குழுவை அமைத்தது. மசோதா விரைந்து தயாரிக்கப்பட்டு டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டது. அம்மசோதா வில் குறிப்பாக அறக்கட்டளைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள நிதிகளைப் பொதுவான பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப் பிடப்பட்டு இருந்தது. இதனால் அந்த மசோதா கருத்து வேறுபாடுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.
இது குறித்து ‘மெயில்’ நாளேடு வரவேற்று எழுதியிருந்தது. ‘இந்து’ நாளேடு எதிர்த்து எழுதி யது. இம்மசோதா குறித்துச் சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதாரின் கருத்து வேறுபாடுகள் ஒளிவு மறைவு இன்றி சபையில் தெறித்து விழுந்தன. ஒரு கட்டத்தில் நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் களுள் ஒருவரான டாக்டர் சி.நடேசனார், “வழக்கில் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்க பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எல்லாச் சமயங்களாலும் போற்றப்படுகிற தமிழைப் புறக்கணிக்கிறார்கள்.” என்று குறிப்பிட் டார். நடேசனாரின் இப்பேச்சை விமர்சனம் செய்து ‘இந்து’ ஏடு எழுதியது. இம்மசோதாவிற்கு பார்ப்பனரிடமிருந்து மட்டுமன்று பார்ப்பனர் அல்லாதாரிடமிருந்தும் மறுப்புகள் எழுந்தன. ஆகவே மசோதா மீண்டும் திருத்தப்பட்டு புதிய வரைவு ஒன்றைத் தயாரித்தனர். இந்த வரைவில் மூன்று உள்ளடக்கங்கள் இருந்தன.
1) கோவிலுக்குத் தேவைக்கு அதிகமாக வருவாய் உள்ளது என்பதை அறநிலையத்துறை முடிவு செய்யும்.
2) கோவிலின் அதிக நிதியை அதே கோவிலின் கையிருப்பாக வைக்க வேண்டும்.
3) அப்படி கையிருப்பாக வைத்திருக்கும் தொகையை ஒத்த கருத்தை உருவாக்கிக் கொண்டு பிற செலவினங்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வது.
இவற்றைச் செயல்படுத்துவதற்காக ஒரு மத்திய கட்டுப்பாட்டுக் குழுவையும் ஏற்படுத்துவது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இக் குழுவைப் பற்றி ‘இந்து’ நாளேடு தனது எதிர்ப்பைப் பதிவு செய்து இருந்தது. பல சர்ச்சை, வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே இந்து அறநிலைய மசோதா 1923 ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறை வேற்றப்பட்டு விட்டது. இதற்காக ‘மெயில்’ நாளேடு (05.04.1923) வரவேற்றும் பாராட்டியும் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. ஆனால், இம்மசோதா வைச் சட்டமாக்க வொட்டாமல் வைசிராயைக் கையெழுத்திட வேண்டாம் எனச் சமயச் சார்பு டைய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. அதோடு இந்துமத பிரதிநிதிகள் வைசிராயைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். இதனால் வைசிராய் மசோதாவில் கையெடுத்திடக் கால தாமதமாயிற்று. மேலும் வைசிராய் ரீடிங் என்ப வர்க்கும் சென்னை மாகாணக் கவர்னராய் இருந்த லார்டு வெலிங்டனுக்கும் இதனால் மனக்கசப்பும் ஏற்பட்டது. இறுதியில் வைசிராயால் கையெழுத் திடப்பட்டு 1925ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறநிலையப் பாதுகாப்பு மசோதா சட்டமாயிற்று.
இச்சட்டம் அரசு இதழில் வெளியிடப்படும் என்ற குறிப்பை அரசு ஆணை எண் 29 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) நாள் 27.1.1925 மூலம் தெரிந்து கொள்கிறோம்.”
ஓர் அய்யங்காரையும், ஓர் அய்யரையும் போட்டுக் கொண்டுவரப்பட்ட சட்டம் அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டமாகும்.
பழைய நிலைக்குக் கொண்டு போகவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
ஏன் இன்றைக்கு அந்த சட்டம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால், கோவிலில் அவர்களால் கொள்ளையடிக்க முடியவில்லை.
அதனால், மறுபடியும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு முன்பு ஜனரக்ஷ சபா போன்ற அமைப்புகள் சொன்னதுபோன்று, ‘ஸ்டேட்டஸ் கோ ஆண்ட்டி’ (Status Quo Ante) என்று சொல்லக்கூடிய பழைய நிலைக்குக் கொண்டு போகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அடுத்து இரண்டு விஷயம்:
ஒன்று, பனகல் அரசர் சொல்கிறார்,
‘‘கல்வியைப் பொறுத்தவரை ஆர்வமுள்ளவர் களுக்கு வாய்ப்பு என்ற கொள்கையையே அரசு இதுவரை கடைப்பிடித்து வந்திருக்கிறது. அரசி னால் அளிக்க இயன்ற மிகச் சிறந்த கல்வி அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைப்பதை இனி அரசு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி கற்பிப்பது என்பது வெறும் படிப்பறிவு பெறுவது என்ற பொருளை அளிப்பதல்ல. உடல் உழைப்புத் தொழிலை மேற் கொண்டிருக்கும் பிரிவுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு படிப்பறிவுடன், தொழிற்கல்வி அறிவும் அளிக்கும் பள்ளிகள் பல உருவாக்கப்படவேண்டும். பள்ளி களிலும், கல்லூரிகளிலும் நியமிக்கப்படும் இந்திய ஆசிரியர்கள் பல்வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும், ஒரே சமூகத்தைச் சேராதவர் களாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பாக, மற்ற பிரிவு மாணவர்களைத் தங்களின் குழந்தை களை விட மேலாகப் பார்க்கும் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். தற்போது மற்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் மிகுந்த பாகுபாடு காட்டுபவர்களாக உயர்ஜாதி ஆசிரியர் கள் உள்ளனர். ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர் களைச் சேர்த்துக் கொள்வதைத் தடை செய்துள்ள பள்ளிகள் சில இருக்கின்றன. இந்த சமத்துவமின் மைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அத் தகைய பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி எதுவும் அளிக்கப்படக்கூடாது.”
இதுபோன்ற பல வரலாற்று சாதனைகளை செய்த சிறப்புடையதே நீதிக்கட்சி ஆட்சி என்பது.
இன்னமும் அந்தப் போராட்டம் தொடருகிறது!
எனவே, ஜாதி ஒழிப்பு, இன்றைக்கு அதுதான் கலைஞர் காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் – இதை எதிர்த்து இன்னமும் உயர்நீதிமன்றத்திற்குப் போகிறார்கள்; உச்சநீதிமன்றத்திற்குப் போகிறார்கள். இன்னமும் அந்தப் போராட்டம் தொடருகிறது.
உருவங்கள் மாறுகின்றன. நடத்துகின்ற களங்கள் அதே களங்கள்தான். நடத்துகின்றவர்கள் மாறுகிறார்கள்.
ஆகவேதான், நீதிக்கட்சி என்னென்ன செய்தது என்பதற்கு எல்லாவற்றிற்கும் விதைகள் நிரூபிக்கின்றன. அந்த விதைகள்தான் இன்றைக்கு வளர்ந்திருக்கின்றன.
அந்த வேர் சரியாக இருந்த காரணத்தினால்தான், இன்றைய ஆட்சி திராவிட விழுதுகள் அதை பலப் படுத்தி செய்யக்கூடிய அளவிற்கும், சமூகநீதி என்பது இப்பொழுது நமக்கு மட்டுமல்ல – இந்தியா முழுமைக்கும் வரக்கூடிய ஒரு பெரிய வாய்ப்பாக இன்றைக்கு உருவாகிவிட்டது.
நீதிக்கட்சி – திராவிட இயக்கத்தினுடைய வெற்றி!
எந்தக் காங்கிரஸ் தந்தை பெரியார் அவர்கள் கொண்டுவந்த பொழுது எதிர்த்ததோ, அதே காங்கிரஸ் இப்பொழுது அதே கொள்கையை சொல்லக்கூடிய அளவிற்கு பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார்.
பெரியார் வெற்றி என்றால்,
நீதிக்கட்சியினுடைய வெற்றி!
நீதிக்கட்சி – திராவிட இயக்கத்தினுடைய வெற்றி!
அடுத்தாண்டு (2024) வரப் போகிற பொதுத் தேர்தல் – இதற்கும் நீதிக்கட்சியினுடைய பிரதிபலிப்பு.
திராவிட இந்தியாவிற்கும், ஹிந்துத்துவ இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்
வேறொரு கண்ணோட்டத்தோடு பார்த்தால் தெரியும். இன்றைய போராட்டம் எப்படிப்பட்டது என்றால், திராவிட இந்தியாவிற்கும், ஹிந்துத்துவ இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்.
அது வெறும் தேர்தல் போராட்டம் அல்ல; திராவிட இந்தியா என்றால் புள்ளி புள்ளி இந்தியா வருகிறது.
இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு நாம் – ஹிந்துத் துவாவை காப்பாற்றுவதற்கு அவர்கள்.
இதுதான் இப்போது விசித்திரமானது!
இதற்கு அடித்தளம் எங்கே இருந்து வந்தது?
நீதிக்கட்சிக் கொடுத்தது!
நீதிக்கட்சி வாழ்க, வளர்க! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.