திருவாரூர், ஜன. 30- திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 28.1.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை யில் தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளி செயலாளர் க.வீரையன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கலந்துரையாடலில், மறைந்த சுயமரியாதை சுடரொளிகள் கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு, மாநில மகளிரணி மேனாள் செயலாளர் க.பார்வதி,
தஞ்சை மாவட்ட காப்பாளர் நெய் வேலி வெ.ஜெயராமன், மற்றும் திருவாரூர் நகர துணைத் தலைவர் சவு.சுரேஷ் தந்தையார் சவுந் தர்ராஜன், திருவாரூர் ஒன்றிய மேனாள் தலைவர் சோழநல்லூர் கோவிந்தராசு, சோழநல் லூர் ஜெபமாலை, சந்தியாம் மாள், பெரியார் நகர் பிச்சை யம்மாள், பெரியநாயகம், திருவாதிரை மங்கலம் பட்டம்மாள், சூரனூர் பக்கிரிசாமி, பட்டம்மாள், திருத்துறைப் பூண்டி வைரகண்ணு துணைவி யார் வை.சாரதாம்பாள் ஆகி யோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்வதெனவும்,
கல்வியிலும் பொருளா தாரத்திலும் மிகவும் பின்தங்கி யுள்ள டெல்டா மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி பெறுவதற்காக மேனாள் முதலமைச்சர் மண் ணின் மைந்தர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பெரு முயற்சியால் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப் பட்டது. இதில் மத வெறியை தூண்டும் வகையில் ஆர்.எஸ். எஸ். தொடர்பு நிகழ்ச்சிகள் நடத்துவதை இக்கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது மேலும் இந்ந பல்கலைக்கழகம் ஆரம்பிக்க காரணமாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் அப்பகுதியில் நிலைத் திருக்கும் வகையில் அவரது நூற்றாண்டை முன்னிட்டு கங் களாஞ்சேரி பாலம் அருகில் பல்கலைக்கழகம் செல்லும் சாலை முகப்பில் முத்தமிழறி ஞர் கலைஞர் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் எனவும் அங்கிருந்து வடகண்டம் பாலம் வரை செல்லும் சாலைக்கு “முத்தமிழறிஞர் கலைஞரின் கருணாநிதி சாலை” என பெயரிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கமிட்டி கேட்டுக்கொள்வதெனவும்,
திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியான ஜி.ஆர் .எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 21.1.2024 அன்று அயோத்தி ராமன் கோயில் திறப்பை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவிகளை ஜெய் சிறீராம் முழக்கமிட வைத்ததை இக்கமிட்டி வன் மையாக கண்டிப்பதுடன் அரசுப் பள்ளிகளே நகரப்பகுதி யில் இல்லாத நிலையில் ஏற் கெனவே அரசுப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மீண்டும் எடுத் துக்கொண்டு அரசுப் பள்ளி களாக செயல்படுத்த வேண்டும் எனவும் கமிட்டி கேட்டுக் கொள்வதெனவும்,
அனைத்து ஒன்றிய, நகரங் களிலும் 5, தெருமுனை பரப் புரைக் கூட்டங்கள் நடத்துவது எனவும்,
வரும் 1.2.2024 அன்று சென்னையில் நடைபெற உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் பேரணியில் திருவா ரூர் மாவட்டத்தில் இருந்து 25 மாணவர்களுக்கு மேல் கலந்து கொள்ளச் செய்வது எனவும்,
‘விடுதலை’ சந்தா வசூல் இலக்கை வரும் 10.2.2024 க்குள் நிறைவு செய்து தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என வும், வருகை தந்தோர் மாவட்ட துணை செயலாளர் கோ.ராமலிங்கம், மாவட்ட ப.க துணை தலைவர் ரெ.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர் கி.அருண் காந்தி, விவசாய அணி செயலாளர் பி.ரத்தின சாமி, நகர தலைவர் கா.சிவ ராமன், நகர துணைத் தலைவர் சவு.சுரேஷ், நகரச் செயலாளர் ப.ஆறுமுகம், குடவாசல் ஒன் றிய தலைவர் என்.ஜெயராமன், துணைத் தலைவர் சி.அம் பேத்கர், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், துணைத் தலைவர் கலிய பெருமாள், நகர செயலாளர் ஆ.சரவணன், பொய்யாமொழி, வடுவக்குடி பழனிச்சாமி, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, செயலாளர் சீ.சரஸ்வதி, திருவாரூர் ஒன்றிய மகளிரணி தலைவர் க.சரோஜா, திருவாரூர் ஒன்றிய தலைவர் கா. கவுதமன், துணைத் தலை வர் கு.ராஜேந்திரன், ஜெ.கனக ராஜ், இளைஞரணி தலைவர் செ.பாஸ்கரன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அழகேசன், மாணவர் கழக இளம் தென்றல் தே.நர்மதா, மாணவர் கழக சு.தர்மசீலன், பா.அறிவுக்கரசு, திருத்துறைப் பூண்டி ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, நகர செயலாளர் ப.நாகராஜன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் மு.சரவ ணன், கண்கொடுத்தவணிகம் பிச்சையன், இளைஞரணி பாலச்சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, தமிழ்நேயன், காட்டூர் க.செங்குட்டுவன், இளவன்கார்குடி கணேசன், திராவிட மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றியம் – நகரங்களில் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
Leave a comment