சென்னை, ஜன.30- நிதிஷ்குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை என திமுக நாடா ளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித் துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி யில் காங்கிரசுக்கு தொகு திகள் ஒதுக்குவது குறித்து முதற்கட்ட பேச்சு வார்த்தை ஞாயிறன்று (28.1.2024) சென்னையில் நடைபெற்றது.
பின்னர் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசு கையில், காங்கி ரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை முடிந்துள்ளது.
அடுத்தகட்ட பேச்சு வார்த்தை வரும் 9ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும். பீகாரில் நிதிஷ்குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் ஒன்றுமே இல்லை, ஹிந்தியில் பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் குமார் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காக அமைதியாக இருந்தோம்.
பிரதமராக வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவிக்க வில்லை. எல்லா கட்சியும் அதிகமான இடங்களில் நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். திமுக கூட 40க்கு 40 தொகுதிகளும் நிற்க வேண்டும் என்று தான் நினைக் கிறோம். கூட்டணி என்று வந்தால் தொகுதிகளை பிரித்து தான் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.