புதுச்சேரி,ஜன.29- புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை புதுச்சேரி நாடார் நலவாழ்வு சங்கம் திருமண மண்டபத்தில் மிக எழுச்சியுடன் 28-01-.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது
திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இராசா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி அவர்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் கி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.ரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.சிவராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ப.குமரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு. தமிழ்செல்வன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ச.பிரபஞ்சன், மேனாள் மாவட்ட தலைவர் தியாகு, மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் வீர.இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் குப்புசாமி, திருக்குறள் சண்முகம், தன்னுரிமை இயக்க பொறுப்பாளர் சடகோபன், புதுச்சேரி நகராட்சி வடக்கு பகுதி தலைவர் ஆறுமுகம், வில்லியனூர் கொம்யூன் தலைவர் உலகநாதன், புலவர் கலியபெருமாள், குமாரமங்கலம் பாலமுருகன்,நெ. நடராஜன் ஆகியோர் முன்னிலையேறு உரையாற்றினார்கள்
வகுப்புகளும் தலைப்புகளும்
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி ‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத் தார். அவரது வகுப்பில் தந்தை பெரியார் அவர் களின் வாழ்க்கை வரலாறு, அவரது தத்துவக் கோட்பாடுகள், சமூகத்தில் அவை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை எடுத் துரைத்தார்.
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் வி.சி. வில்வம், “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். அவரது வகுப்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின பன்முக ஆற்றலையும் 80 ஆண்டு பொதுவாழ்வில் அவர் சந்தித்த அறைகூவல்கள், சாதித்த சாதனைச் சுவடுகள் ஆகியவற்றை எளிய உரையாடல் மூலம் விளக்கினார்.
தொடர்ந்து, திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் ‘சமூக நீதி வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அவரது வகுப்பில சமூக நீதியின தத்துவம், தேவை, வகுப்புரிமை வரலாறு, சமூக சமத்துவத்தை பேணுவதில் இடஒதுக்கீட்டின் அவசியம், இட ஒதுக்கீடு ஆணைகள் எதிர்கொண்ட சிக்கல்கள், அரசாணை சட்டமாக உருக் கொண்ட வரலாறு அதில் திராவிடர் கழகம் மற்றும் அதன் ஆற்றல் மிக்க தலைவரான ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்கினார்.
புதுவை கே.குமார் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் வகுப் பெடுத்தார். எளிய முறையில் மூடநம்பிக்கை களையும், அறிவியல் மனப்பான்மையின் தேவை குறித்தும் விளக்கினார்.
‘திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ‘பார்ப்பன பண்பாட்டு படையெப்புகள்’ என்ற தலைப்பில் வகுப் பெடுத்தார்.
அவரது வகுப்பில் முக்கியமாக தமிழர்கள் சமத்துவமான மிகச் சிறந்த ஜாதி பேதமற்ற முறையில் பண்பாட்டோடு வாழ்ந்தார்கள் என்றும், பிற்காலத்தில் நாம் அவற்றை இழந்து இனமொழி உணர்வுகளை இழந்து ஆரியத்திற்கு அடிமைப்பட்டவர்களாக ஆரிய பண்பாட்டில் சிக்கி பெயர்களை கூட தமிழில் வைக்காமல் வடமொழியில் வைத்ததை நினைவூட்டி அத்தகைய பெயர்களுக்குக் இணையாக தமிழ் சொற்களை கூறி விளக்கினார்.
குடந்தை, திருமுதுக்குன்றம், மரைக்காடு, மயிலாடுதுறை, ஆகிய ஊர்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டதை விளக்கினார்.
விழாக்களின் பெயர்கள் கூட சமஸ் கிருதத்தில் மாற்றப்பட்டதையும் புதிய தேவை யற்ற மூடநம்பிக்கை சடங்குகள் புகுத்தப்பட் டதையும் சமஸ்கிருத மொழியிலேயே அவை நடத்தப்பட்டதையும் விளக்கி நாவலர் ராமச்சந்திர பாரதியார் அவர்கள் ஒரு திருமண வீட்டில் இருந்த புரோகிதர் கருமாதி மந்திரத்தை கல்யாண வீட்டில் சொன்னதையும் அதை சுட்டிக் காட்டி சோமசுந்தர பாரதியார் அவனுக்கு அதன் பொருளை விளக்கியதையும் கூறினார்.
பொருள் தெரியாமலேயே தமிழர்கள் தங்களின் சுயமரியாதை இழக்கிறார்கள் என்பதை தெரிவித்தார்.
லிப்கோ பதிப்பகம் வெளியிட்ட ‘விவாக சுப முகூர்த்த மந்திர போதினி’ என்னும் கீழாத்தூர் சீனிவாசாச்சாரியாரின் புத்தகத்திலிருந்து சுலோ கங்களை படித்து அதன் பொருள்களை விளக்கி சுயமரியாதைக் கேட்டை விளக்கினார்.
வடமொழி பண்பாட்டில் இருந்து தமிழ் மொழி மறுமலர்ச்சி பெற்றதில் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் பங்களிப்பை எளிய முறையில் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் விளக்கினார்.
திராவிடர் கழக துணை பொதுப்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசுபெரியார் ‘தந்தை பெரியாரின் பெண் உரிமை சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அவரது வகுப்பில் பெண்கள் பிறப்பதற்கு முன் கருவில் அழிக்கப்படுவதில் தொடங்கி இந்த சமூகத்திலும் குடும்பத்திலும் அவர்கள் எதிர்கொள்ளும் அறைகூவல்களை விளக்கினார். பெண் களுக்கான வாழ்வுரிமை கல்வி உரிமை சொத் துரிமை தொழில் உரிமை பொருளாதார உரிமை களைத் தடுப்பதில் மதத் தலைவர்களுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் உள்ள பிடிப்பையும், அவற்றை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்ற அறிவு இயக்கத்தின் போராட்டங்களையும் விளக்கினார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘இந்து, இந் துத்துவா ஆர்.எஸ்.எஸ்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அவரது வகுப்பில் இந்து மதத்தில் காணப்படும் விளக்க குழப்பத்தில் தொடங்கி முழுவதும் மூடத்தனத்திலேயே இருப்பதையும், இது பார்ப்பனர்களுக்கு பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்க எவ்வாறு பயன்படுகிறது என்பதையும், கோல் வால்கரால் உருவாக்கப்பட்ட கோட்பாடான இந்துத்துவா, சொல்லை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பாசிச வலதுசாரி அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பின் நோக்கம் விளைவித்த சமூக கேடுகள் அவற்றிலிருந்து விடுபட இளைஞர்கள் முன் வர வேண்டியது அவசியம் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியதுடன். பயிற்சியில் பங்கேற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுரை யாற்றினார்
மாணவர்களுக்கு பரிசு
வகுப்பை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பெடுத்த மூன்று மாணவர்களை தேர்வு செய்து சேதரப்பட்டு ப.ராகப்பிரியா முதல் பரிசு ,புதுவை ச.பிரபஞ்சன் இரண்டாவது பரிசு, அ.இளவரசி மூன்றாவது பரிசு – இவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.
பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களும் கழகப் பொறுப்பாளர்களும் குழு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்து விடைப் பெற்றனர்.
1,420 ரூபாய்க்கு கழகப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.