தேவையான இடங்களில் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது! அமைச்சர் அர.சக்கரபாணி அறிக்கை!

viduthalai
3 Min Read

சென்னை, ஜன.27- நெல் கொள் முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை மையிலான அரசுபொறுப்பேற்ற பின்பு நெல் கொள்முதல் நிலையங் கள் திறப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இரண்டு விவ சாயிகள், வேளாண்மை இணை இயக் குநர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலா ளர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
இதன்படி தேவைப்படும் இடங்க ளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாளன்று தொடங் கும் நெல் கொள்முதல் பணி யானது, உழவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க ஒரு மாதம் முன்னதாகவே செப்டம்பர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்திட ஒன்றிய அரசிடம் அனுமதி பெறப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 01.09.2023 முதல் நாளது தேதி வரை 5,54,874 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 87,811 விவசாயிகளுக்கு ரூ. 1,257.81 கோடி அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட் டுள்ளது.
தற்போது காவிரி பாசன மாவட் டங்களில் (ஞிமீறீtணீ ஞிவீstக்ஷீவீநீts) சம்பா அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டு நெல்வரத்து வரத் துவங்கியுள் ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுத் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
காவிரி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை ஆகிய அய்ந்து மாவட்டங்களிலும் 957 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 195 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நெல்லை எப்போது கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்ய இவை தயார் நிலையில் உள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல மைச்சர் அவர்கள் மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க ஆணையிட்டுத் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றிற்கு சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.107-ம் சேர்த்து ரூ.2,310-க்கும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.82-ம் சேர்த்து ரூ.2,265-க்கும் கொள்முதல் செய்யப் படுகிறது.
நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைப் பேசி எண் (உழவர் உதவி மய்யம்) 1800 599 3540 மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய துறை உயர் அலுவலர்களின் அலைபேசி எண் கள் கொண்ட அறிவிப்புப் பதா கையும் புகார் பெட்டியும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 24.1.2024 அன்று அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தன் டிவிட்டர் பக்கத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாகத் திறக்கப்படுவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி தேவைப்படும் இடங்களில் நெல்கொள்முதல் நிலை யங்கள் உடனுக்குடன் திறந்து நெல் கொள்முதல் செய்யப்படும் விவரம் அந்தந்தப் பகுதி நெல் விவசாயி களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
25.1.2024 அன்று தலைமைச் செயலாளர் அவர்களால் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட காவிரிப் பாசன மாவட்ட ஆட்சித் தலைவர் களின் கூட்டத்திலும் நெல் கொள் முதல் நிலையங்களைத் தேவைப் படும் இடங்களில் விரைந்து திறந்து நெல் கொள்முதல் செய்திட வலி யுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகத்தால் நடப்பு சம்பா பரு வத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் லைக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுக ளும் செய்யப்பட்டுள்ள தால் விவசாயிகள் தங்கள் நெல் லினை இவற்றில் விற்றுப் பயன் பெற்றிடக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி அறிக்கையில் கேட் டுக் கொண்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *