தமிழர் சுயமரியாதை காப்பாற்றப்பட்டது

2 Min Read

* திரு.மு.இராகவ அய்யங்காரின் தொல்காப்பிய ஆராய்ச்சி கண்டனம்
* திரு.ஆர். நரசிம்ம செட்டியார் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது!
இன்று காலை 8:00 மணிக்கு முனிசிபல் சேர்மன் திரு.பி.ஏ. ராஜரத் தினம் தலைமையில் கூடிய சேலம் முனிசிபல் சபைக் கூட்டத்தில் திரு.ஆர். நரசிம்ம செட்டியார் கொண்டு வந்த கீழ்க்கண்ட தீர்மானம் விவாதமின்றி ஏகமனதாக நிறைவேறியது.

தீர்மானம்
“திரு.மு.இராகவய்யங்கார் எழுதி யுள்ள ‘தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி’யில் “தமிழ் மக்களுடைய பண்டைக்கால நாகரிகத்தை மிகவும் இழிவுபடுத்தியிருப்பதால் அப்புத்தகத் தைப் பாடப் புத்தகமாக
வைத்திருப்பதை எடுத்துவிட வேண்டுமாய் யுனிவர்சிட்டியாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.’’
இம் முனிசிபல் கூட்டத்திற்கு ஜஸ் டிஸ், சுயமரியாதை, காங்கிரஸ் ஆகிய பல கட்சியையும் வகுப்பையும் சேர்ந்த கவுன்சிலர்கள் வந்திருந்தும் இத்தீர்மா னம் ஏகமனதாய் நிறைவேறியதிலிருந்து இப்பிரச்சினையை ஒரு சாரார் கிளர்ச்சி என யுனிவர்சிட்டியாரும் புறக்கணிப்ப தற்கில்லை. எல்லா கட்சியைச் சேர்ந்த பிரமணரல்லாதாரும் திரு.அய்யங்காரின் ஆராய்ச்சியை முழு மனதோடு வெறுக் கிறார்கள் என்பதை சேலம் முனிசிபல் சபைத் தீர்மானம் நிரூபித்துக் காட்டி விட்டது.

இம்மாதிரி முக்கியமான பிரச்சினை களில் பொதுஜன அபிப்பிராயத்தை எடுத்துக் காட்டுவதற்கு இம்மாதிரியான சபைகளின் தீர்மானங்கள் சாதகமான கருவி என்பதில் ஆட்சேபனை இருகக் முடியாது. இந்தப் பணி பற்றி மற்ற முனிசிபாலிடிகளிலும் ஜில்லா போர்டு களிலும் தீர்மானங்கள் செய்து தமிழர் களின் மானத்தையும், சுயமரியாதையை யும் காப்பாற்ற வேண்டியது அவசியம். இது சம்பந்தமாய் தமிழ்நாட்டில் பொது மக்களால் எவ்வளவோ கிளர்ச்சி செய் யப்பட்டும், கூட்டங்களில் தீர்மானங்கள் செய்து யுனிவர்சிட்டியாருக்கும் சர்க் காருக்கும் அனுப்பி வைத்திருந்தும் இது வரை கவனிக்கப்பட்டதாகத் தெரிய வில்லை. ஆனால், ஸ்தல ஸ்தாபனங் களில் இம்மாதிரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதுவே முதல் தடவையாகும்.

இது சம்பந்தமாய் சிரமம் எடுத்துக் கொண்டு இத்தீர்மானத்தை இவ்வளவு வெற்றிகரமாய் நிறைவேற்றி வைத்த மைக்காக கவுன்சிலர் திரு.ஆர். நரசிம்ம செட்டியாரை தமிழ் மக்கள் போற்று வார்கள் என்பதில் அய்யமில்லை. பொதுவாகவே திரு. செட்டியார் தமிழ் வளர்ச்சியிலும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திலும் ஆர்வமுள்ளவர். சேலம் செந்தமிழ்ச்சங்கத்தில் நீண்ட நாளாகவே தலைவராக இருந்து அரும் பெரும் தொண்டுகள் செய்திருக்கிறார் என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப் பிடாமலிருப்பதற்கில்லை.
– ‘விடுதலை’ – 3.6.1936

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *