ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை 2007இல் துவக்கியது. எச்-2ஏ ராக்கெட்டில் ‘சைலன்ஸ்’ விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11இல் நிலவுக்கு ‘ஹகூடா-ஆர்’ விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப கோளாறால் நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. பின் 2023 செப். 6ல் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்திலுள்ள லேண்டர் 2024 ஜன. 19இல் நிலவில் தரையிறங்கியது. இச்சாதனையை நிகழ்த்திய 5ஆவது நாடானது.