சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் சூத்திரனாக இருக்க முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நிய ஆரியப் பார்ப்பானின் தாசி மகனாக, வேசி மகனாக கருதப்பட முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் அந்நிய வடவர்களால் சுரண்டப்பட முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டாதவர்களாகத் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’