பெரியார் அன்று எழுதியதை இன்று படிக்கும் போது என் ஏக்கம் தீர்ந்தது

viduthalai
1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் நீடு வாழ வேண்டும் – வழி காட்ட வேண்டும். வலி போக்க வேண்டும். வலிமை சேர்க்க வேண்டும். பெரியாரைக் கண்டதில்லையே என்ற ஏக்கம் – தங்கள் கட்டுரையைப் படித்த பின்பும், பெரியார் அன்று எழுதியதை இன்று படிக்கும்போதும் என் ஏக்கம் தீர்ந்தது. ஊக்கம் வந்தது – பெரியாரையே பார்த்தது போல் பேசுவது போல் உணர்கிறேன்.
அந்த மனிதநேயமும் – மானமும், அறிவும் – மனிதனுக்கு அழகு. பக்தி வந்தால் புத்தி போகும். மறக்க முடியுமா என்னால்?Periyar is embodiment of love towards mankind. Love cures all the deep wounds. So to say love is a magic pill. மன்னித்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும் என்னுடைய பழக்கம். இன்றும் வழக்கமாகிப் போனது. தலைமைச் செயலக பணி தந்த பரிசு இது. தங்களைப் பொறுத்தவரை வயது ஓர் எண் மட்டுமே. எண்ணியதை திண்ணமாய் உரைக்கும் ஆற்றல் தங்களிடம் உண்டு. ஒரு நாள் தங்களை வந்து கண்டிப்பாக சந்திக்க விரும்புகிறேன்.

என்றென்றும் நன்றியுடன் சுயமரியாதைக்காரி
– ஞா. சிவகாமி,
போரூர், சென்னை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *