ஜனவரி 20, 21 (சனி, ஞாயிறு)
திருச்சி சுந்தர் நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்
திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும்
மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை
திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டத்தலைவர்கள் செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்
மக்களை மடமையாக்கும் மாந்திரீகம், ஜோசியம், ஜாதகம் சாமியார்களின் மோசடிகளை முறியடித்து மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு பிரச்சாரத்தில் முதன்மையானது மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சி.
மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சியாளர்களை நாடு முழுவதும் பரவலாக உருவாக்கிட வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திருச்சி, சுந்தர் நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்; 2024 ஜனவரி 20, 21 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை நடைபெற வுள்ளது.
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு தலைவர் மானமிகு நரேந்திரநாயக் இருநாட்களும் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
ஆர்வமுள்ள இருபால் கழகத்தோழர்களை பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைக்குமாறு திரா விடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு:
19.01.2024ஆம் தேதிக்குள்
முன்பதிவு செய்திட வேண்டுகிறோம்.
கட்டணம்: ரூ. 300/-
குறிப்பு: தற்போது உள்ள மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் இருநாட்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
இவண்: அண்ணா.சரவணன் – 9443510466
முனைவர் மு.சு.கண்மணி – 9842489040
வி.இளவரசி சங்கர் – 9952188824
மாநில துணைப் பொதுச்செயலாளர்கள்
பகுத்தறிவு பயிற்சிப் பட்டடறைப் பொறுப்பாளர்கள்
பகுத்தறிவாளர் கழகம்.
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்
தொடர்புக்கு : 98425 98743