சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு – ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைக்கும்! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

1 Min Read

சேலம், ஜன.18- சேலம் திமு.க இளைஞர் அணி மாநில மாநாடு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.

மாநில மாநாடு

தி.மு.க. இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற 21ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.
இந்த மாநாட்டு பணிகள் அமைச்சர் கே.என்.நேரு முன்னி லையில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை நேற்று (17.1.2024) பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு செய்தி யாளரிகளிடையே கூறியதாவது:-
தி.மு.க. மாநில மாநாடு இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும். தமிழ்நாடு முழுவ தும் இருந்து 10 ஆயிரம் பேருந்துகள், 50 ஆயிரம் வேன்கள், அதுதவிர கார்கள், லாரிகளில் என சுமார் 5லட்சம் பேர் வருவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து இருக்கிறோம். வருகிற 20ஆம் தேதி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் மாநாட்டு திடலுக்கு வருகிறார்.

டிரோன்கள் ஷோ

அப்போது இருசக்கர வாகன ஊர்வலத்தை பார்வையிடு கிறார். தொடர்ந்து ஆயிரம் டிரோன்கள் ஷோ நடக்கிறது. மாநாட்டில் இளைஞர் அணியினர் சீருடையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள், உதய நிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாநாட் டின் நோக்கம், கட்சியில் உள்ள இளைஞர்களின் பொறுப்பு என்ன என்பன எல்லாம் கூட் டம் வாயிலாக பேசி வருகிறார்.
எனவே, அனைத்து மாவட்ட இளைஞர் அணியினரும் உற்சா கமாக மாநாட்டுக்கு வர இருக் கிறார்கள்.
இந்த மாநாட்டு ஏற்பாடு தி.மு.க.வினர் மத்தியில் எழுச் சியை ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெறும். இந்த மாநாடு ஒன்றியத்தில் நிச்ச யம் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்துவதற்கான மாநாடாக அமையும்.
-இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *