கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை… கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுகள்…

Viduthalai
2 Min Read

அரசியல்

நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.

கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக் குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த சிவப்பு அணுக்கள் உடைந்துபோகும்போது மஞ்சள் நிற மியான பிலிரூபின் வெளியாகுவது மஞ்சள் நிற மாற்றத்திற்கு காரணமாகும். இது கல்லீரலின் ஆரோக்கியத்தின் மோச மான அறிகுறியாகவும் அமையும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட் டால் மருந்து மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் மஞ்சள் காமாலையை குணப் படுத்திவிடலாம். வேறு சில நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவு களை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீ ரலை பாதுகாக்கும்.

கொழுப்பு: மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணெய் சேர்க்கப்படாத உணவை உட்கொள்வது நல்லது. ஏனெனில் எண்ணெய் சேர்க்கப் பட்ட உணவுகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச்செய்து விடும். குறிப்பாக வெண்ணெய், பால் பொருட்கள், இறைச்சி போன்ற நிறை வுற்ற கொழுப்பு கலந்த உணவுகள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானவை. அதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் மஞ்சள் காமாலை இருக்கும்போது குறைவா கவே பயன்படுத்தவேண்டும்.

சர்க்கரை: இனிப்பு பிரியர்களுக்கு மஞ்சள் காமாலை கடினமான காலகட்ட மாகவே அமையும். ஏனெனில் அந்த சமயத்தில் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்யும். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான அபாயமும் அதி கரிக்கும். ஆதலால் எந்தவகையிலும் சர்க்கரை கலக்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.

உப்பு: உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் அது உடலில் உள்ள நீரில் படிந்துவிடும். கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதில் இருக்கும் சோடியம்தான் அதற்கு காரணம். ஆத லால் கல்லீரலை பாதுகாக்க உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண் டும். உப்புக்கு பதிலாக வெங்காய தூள், பூண்டு தூள் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.

இரும்பு: மஞ்சள் காமாலை இருக்கும் போது உடலில் இரும்புச்சத்து அதிகரிப்பது கல்லீரலுக்கு மோசமானது. இரும் புச்சத்து முக்கியமானது என்றாலும் இந்த காலகட்டத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதத்தில் இரும்புச்சத்து கலந்திருக்கும். ஆதலால் புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

காய்கறிகள்: கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலி பிளவர், பிராக்கோலி, எலுமிச்சை, கீரை, பீன்ஸ், பூண்டு, மஞ்சள், அவகொடோ, ஆப்பிள், வால்நெட் போன்றவை கல்லீரலின் ஆரோக்கி யத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *