கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

17.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

👉 காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியோடு தேர்தலை சந்திப்போம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.

👉 தேர்தல் பத்திரங்கள் எதிரான வழக்கின் விசாரணை அக்டோபர் 31 நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

👉தமிழ்நாட்டில் 131 பழங்குடியினருக்கான பள்ளிகளில் படிக்கும் 6500 பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்க திட்டம் துவக்கம்.

👉தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் 33 இடங்களில் நடத்த நீதிமன்றம் அனுமதி.

👉 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது குலசேகரப்பட்டினத்தில் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் இஸ்ரோ தலைவர் பேட்டி

தி ஹிந்து

👉 ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பிளவு படுத்துவதற்காக அல்ல, ஆனால் தகுதியுடையோர் தங்கள் உரிமையை பெறுவதை உறுதி செய்வதற்காக என ராஜஸ் தானில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉 டில்லி கலால் கொள்கை வழக்கில் சிசோடியாவை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது. அமலாக் கத்துறை, சிபிஅய்யிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.

👉 மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுவது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி சாடல்.

👉 16 எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லியில் பாலஸ்தீன தூதரைச் சந்தித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அய்.நா தீர்மானத்தின்படி 1967 எல்லையில் சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதை பன்னாட்டு சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தூதுக்குழு வலியுறுத்தியது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉 பா.ஜ.க.வுடன் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்திட அக்கட்சியின் தலைவர் சி.எம்.இப்ராஹிம் கடும் எதிர்ப்பு.

எகனாமிக் டைம்ஸ்

👉 இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஹிந்து மகாசபையால் ஏற்பட்டது; ஜின்னாவால் அல்ல என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *