சென்னை, நவ. 24- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள் திருடப்படுவதாக கூறினார். அவரது குற்றச் சாட்டுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியதாவது:- தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பெரும் பணிகளை ஆற்றியுள் ளது. ஆனால் அந்த பணி களுக்கு களங்கம் கற்பிக் கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகிறார் கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள் சம் பந்தமான குறைகளை தெரிவிக்கும் வகையில் “குறைகளை பதிவிடுக” என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். கோவில்க ளுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அடங் கிய 4 கோடி பக்கங்கள் ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி கள் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆட்சி ஏற்பட்ட தில் இருந்து இது ஹிந் துக்களுக்கு எதிரான ஆட்சி என்ற ஒரு பிம் பத்தை ஒன்றிய அரசை சேர்ந்தவர்கள் உருவாக்க முயற்சித்தார்கள். அதில் அவர்கள் நினைத்தது போல் எள்ளளவும் வெற் றியடைய முடியவில்லை, படுதோல்வியே அடைந் தார்கள். அவர்கள் நினைத் தது நடைபெறவில்லை என்பதற்காக உயர் பொறுப்பில் இருக்கின்ற ஒருவர் ஒன்றிய அமைச் சர் (நிர்மலா சீதாராமன்) குற்றச்சாட்டை கூறுகிறார். உளவுத்துறை நன்றாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் தமிழ்நாட்டில் சட் டம் -ஒழுங்கு, ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. கோவிலில் பெட்ரோல் குண்டு வீசியவரை உடன டியாக கைது செய்துள் ளோம். உயரிய பொறுப் பில் உள்ளவர்கள் ஆதா ரத்துடன் குற்றச்சாட்டு களை கூறினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நிச்சயம் கண் டிக்கத்தக்கது. முதல மைச்சர் பொறுப்பேற்ற பிறகுதான் கோவில்க ளுக்கு சொந்தமான சுமார் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக் களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து இருக்கின்றோம். அதே போல 1,165 கோவில்களில் பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தி இருக்கின்றோம். கடத்தப்பட்ட சிலைகள், கலைப் பொருட்கள், உலோகத் திருமேனிகள் என 400 இனங்கள் இது வரையில் மீட்கப்பட்டி ருக்கின்றன.
இந்த ஆட்சி இறை சொத்தை மீட்கின்ற ஆட்சி தானே தவிர, இறை சொத்துக்களை களவாடுவதற்கு உதவு கின்ற ஆட்சி இல்லை என்பதை நிர்மலா சீதா ராமனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் கள் விடயத்தில் அரசியல் செய்யக்கூடாது.
இந்து சமய அறநிலையத்துறை மீது யார் குற்றம் சாட்டி னாலும், அதற்கு வெளிப் படைத் தன்மையோடு பதில் கூற துறை தயாராக இருக்கின்றது. கோவில் கள் சார்பில் நடத்தப்படும் 1,100-ஆவது இணைகளுக் கான திருமணங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.