சென்னை, அக் 18 இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறிப்பு மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும் விரை வில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், 11 சுயநிதி கல்லூரிகளும், ஆயுர்வேதா பிரிவில் ஒரு அரசுக் கல்லூரியும், 6 சுயநிதி கல்லூரிகளும், யுனானி யில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், ஓமியோபதியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், 11 சுயநிதி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 64 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 695 விண் ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2 ஆயிரத்து 530 விண்ணப் பங்கள் தகுதியானவையாக கருதப் பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 556 விண்ணப் பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 968 விண்ணப்பங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங் களுக்கு 913 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இந்த மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தேர் வுக்குழு தலைவர் டாக்டர் மலர்விழி, இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன், டாக்டர் மணவாளன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய் வும், அரசு ப்பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத ஒதுக் கீட்டுக்கான கலந்தாய்வும் நடை பெற உள்ளது. வருகிறஅக்டோபர் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கப் பட்ட இடங்களுக்கான கலந் தாய்வு நடக்கிறது. வருகிற 31-ஆம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அடுத்த மாதம் (நவம்பர்) 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத் தப்பட இருக்கிறது. தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்த மருத்துவ பல் கலைக்கழகத்தில் வேந்தராக முத லமைச்சரும், இணை வேந்தராக அந்த துறையின் அமைச்சரும் இருப்பார்கள் என்றும், துணை வேந்தர் முதலமைச்சரால் நியமிக்கப்படும் நபர் இருப்பார் என்றும் சட்டத்திட்டங்கள் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்பு தலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ஆளுநர் ஒப்பு தல் அளிக்காமல் இருக்கிறார். ஒன்றிய ஆயுஷ் அமைச்சரிடமும் இதுதொடர்பாக வலியுறுத் தப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுகுடல் பரிசோதனை செய்ய கருவி இந்தியாவில் முதல் முறையாக நிறுவப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை வழங்குவதால், அரசு மருத்துவ சேவையை மக்கள் கூடுதலாக பயன்படுத்தி வருகின் றனர். எனவே சென்னை மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை கூடி வருகிறது. இந்தி யாவிலேயே முதல் முறையாக முதியோருக்கான மருத்துவமனை இங்கு திறந்து வைக்கப்பட உள்ளது. டில்லி எய்ம்ஸ் மற்றும் சென்னை கிண்டியில் முதியோ ருக்கான மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் டில்லி எய்ம்ஸ் மருத் துவமனையில் பணிகள் முடி வடையவில்லை. சென்னை கிண்டியில் முதியோர் மருத்துவ மனை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார்படுத்தியுள்ளோம். சென்னை கிண்டி, கிங் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முதி யோர்களுக்கான சிறப்பு மருத்துவ மனை தொடங்க முதலமைச்சரி டமும், ஒன்றிய அமைச்சர் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.