சிறப்பாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!
அரூர், அக்.18-அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அக்டோபர் 28ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பிரச்சார பயணக் பொதுக் கூட்டத்தினை எழுச்சியாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் 16.10.2023 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அரூர் நெடுஞ்சாலைத் துறை பயணியர் மாளிகையில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் மேனாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் நோக்கத்தை பற்றி திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் முன்னுரையாற்றினார். அதைத்தொடர்ந்து காங் கிரஸ் கட்சியின் சார்பில் பொறுப்பாளர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, சி.பி.அய். கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்குமரன், சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயலாளர் அ.குமார், மதிமுக மாவட்ட பொறுப்பாளர் ராமதாஸ், இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளர் பழனிசாமி, ராஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் நிவாஸ், கழகத் தலைமைக் கழக அமைப்பாளர் பழ. பிரபு, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்
சா. இராஜேந்திரன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, கழகக் காப்பாளர் அ.தமிழ்ச் செல்வன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலை வர் தீ.சிவாஜி ஆகியோர் கருத்துரை ஆற்றி னார்கள்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் தனது தலைமை உரையில், திராவிடர் கழகத்தின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தாலும், திராவிட இயக்கத்தின் வழிகாட்டி ஆசிரியர்தான், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வழி காட்டியாக இருக்கிறார், தமிழர் தலைவர் ஆசிரியர் அரூர் நகருக்கு வருகை தருவது சிறப்புக்குரியதாக இருக்கிறது, திராவிட இயக்கமாக இருந்தாலும், பொதுவுடைமை இயக்கமாக இருந்தாலும், அம் பேத்கர் அமைப்புகளாக இருந்தாலும் அவர்தான் இன்றைக்கு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியதுபோல பெரியார் திடல் வழிகாட்டுகிறது. இந்தப் பிரச்சார பயணக் கூட்டம் தமிழ்நாட்டில் பல நகரங்களில் நடக்கவிருந்தாலும், அரூர் நகரில் நடந்தது போல் எங்கும் நடக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடத்த வேண்டும். இந்தக் கூட்டமானது 2024 இல் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்க கூட்டமாக அமையும் என்று நான் நம்புகிறேன். அரூர் நகருக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரை சிறப்பாக வரவேற்று செய்து காட்டு வோம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியை நகர திமுக செயலாளர் முல்லை. இரவி ஒருங்கிணைத்து நடத்தினார். மாவட்ட திமுக துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், மொரப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்கண்ணன், கடத்தூர் ஒன்றிய செயலாளர் நெப்போலியன், அரூர் ஒன்றிய செயலாளர் வேடம்மாள், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் பாஷா, திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் த.யாழ். திலீபன், ப.பெரியார், இ.சமரசம், பார்த்தசாரதி, சாய்குமார், தென்றல் பிரியன், சூர்யா, திமுக பொறுப்பாளர்கள் பாண்டியன், அசோகன், ரஞ்சித் குமார், தமிழழகன், தமிழ்ச்செல்வன், முனிரத்தினம், சரவணன், சண் முகம், விண்ணரசு, விசிக கேசவன், சிபிஅய் முருகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், கலைவாணி, சமூக ஆர்வலர் பிரேம்குமார், குடியரசுக் கட்சி பிளவேங்கன், ஒன்றிய கழகத் தலைவர் துரைராஜ், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சண்முகம், இளைஞரணி செயலாளர் தென்றல் பிரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர திமுக செயலாளர் முல்லை. இரவி செய்திருந்தார்.