புதுடில்லி,ஜன.6- நாடாளுமன் றத்தில் மாநிலங்களவையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மாநிலங்களவை உறுப் பினர்களாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில், 9 ஒன்றிய அமைச்சர் உள்பட மொத்தம் 68 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெற இருக்கின்றனர். இதனால், பல்வேறு அரசியல் தலைவர்களும் அந்தப் பதவியை பெறும் முனைப்பில் உள்ளனர்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகிய 3 பேரின் பதவிக் காலம் வருகிற 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.
இதேபோன்று, சிக்கிமில் எஸ்.டி.எப். கட்சியின் உறுப்பினர் ஹிஷே லச்சங்பா என்பவரின் பதவி காலம் வருகிற பிப்ர வரி 23-ஆம் தேதியுடன் முடிவடை கிறது. இந்த ஓரிடத்துக்கான தேர்தலும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.
மொத்தமுள்ள 68 இடங்களில், அதிக அளவாக உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்கள் காலியாக உள்ளன. இதனை தொடர்ந்து மராட்டியம் மற்றும் பீகார் (தலா 6), மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் (தலா 5), கருநாடகா மற்றும் குஜராத் (தலா 4), ஒடிசா, தெலங்கானா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் (தலா 3), ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் (தலா 2), உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், அரியானா மற்றும் சத்தீஷ்கார் (தலா 1) ஆகியவை உள்ளன.
இதில், வரும் ஏப்ரலுடன் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ் ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்திரா யாதவ், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது.
இதேபோன்று, வெளிவிவகார இணை அமைச்சர் வி. முரளீதரன், மைக்ரோ, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சர் நாராயண் ரானே, மேனாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் ஓய்வு பெறுவோரின் வரிசையில் அடங்குவர்.
68 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிகிறது
Leave a Comment