சாமானியர்களுக்கு புத்தர் கூறும் அறவுரைகள்

2 Min Read

• ஆழ்ந்த கருத்தும் தெளிவும் இல்லாத செயல்களையும், மனச் சுத்தம் இல்லாமல் செய்யும் விரதங்களையும் மேற்கொள்ளாதே. அவை எந்த பலனும் தரப் போவதில்லை.
• தீய செயல் உனக்கு வேதனை தரும். நல்ல செயல் உனக்கு இன்பம் தரும். ஆதலால் தீய செயல்களைத் தவிர்த்து நல்ல செயல்களை மட்டும் செய்.
• உன்னை நல்வழியில் நிறுத்தி, பகவான் புத்தரின் போதனைகளைக் கற்றுத் தெளிந்து, முக்தி அடையக் கிடைக்கும் வாய்ப்பினைத் தவற விடக் கூடாது. தவற விட்டால் நீ நரகத்தில் தள்ளப்படுவாய்.
• நீ வெட்கப்பட வேண்டிய செயல்களுக்கு வெட்கப்பட வேண்டும். வெட்கப்பட வேண்டாததற்கு வெட்கப்படக் கூடாது. இதில் மாறுதலானக் கருத்துகள் உன்னிடம் இருந்தால் நீ துயரமடைவாய்.
• எதற்குப் பயப்பட வேண்டுமோ அதற்கு நீ பயந்தே ஆக வேண்டும். எதற்குப் பயப்பட வேண்டியதில்லையோ அதற்குப் பயப்படக் கூடாது. இதில் மாறுதலானக் கருத்துகள் உன்னிடம் இருந்தால் நீ துயரமடைவாய்.
• தீது என்று ஒன்று இல்லாத போது, தீது என்று ஒன்று உள்ளது போலவும், தீது என்று ஒன்று உள்ள போது தீது என்று ஒன்று இல்லாதது போலவும் பொய்யான கருத்துகள் உன் மனதில் இருந்தால் நீ துயரமடைவாய்
• நற்பண்புகள் இல்லாமல் வீண் பழி கூறும் பலர் உன்னைத் சுற்றிலும் இருப்பார்கள். ஆனாலும் உன் மீது கூறப்படும் வீண் பழிச் சொற்களை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
• நீ மனிதருள் சிறந்தவன் ஆக வேண்டுமானால் உன்னை நீயே அடக்கி ஆள வேண்டும். பெரிய மனதோடு, உன்னை பிறர் தவறாகப் புரிந்து கொண்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
• சுறுசுறுப்பு கொஞ்சமும் இல்லாமல், பெரும் தீனியை விரும்பி உண்டு, படுக்கையில் உருண்டு, புரண்டு, படுத்துத் தூங்கி நீ பொழுதைப் போக்கும் பெரும் சோம்பேறியானால் மறுபடி மறுபடி பிறவி எடுத்துத் துன்பப்படுவாய்.
• முன்னெச்சரிக்கையான வாழ்வை விரும்பி எண்ணங்களில் நல்லவைகளை நன்கு காத்திடுக. சேற்றில் சிக்கிய யானை தானே முயன்று சேற்றிலிருந்து வெளியேறித் தப்பிக்கிறது. அது போல புதை குழி போன்ற தீயவைகளில் புதைந்து போகாமல் நீ, நீயாகவே வெளியேறு..
தொகுப்பு: ஞா.ம.சந்திரசேகரன்
நன்றி: ‘போதி முரசு’ – ஜனவரி 2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *