சென்னை,டிச.30- சிறீஹரிகோட் டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி – 58 ராக்கெட் ‘எக்ஸ்போ சாட்’ உள்ளிட்ட செயற்கைகோள்களை சுமந்தபடி வரு கிற 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி விண்ணில் பாய்கிறது.
ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ். எல்.வி. சி-58 ராக்கெட் வருகிற 1ஆம்தேதி (நாளை மறுநாள்) காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற் கைக்கோள் 500-700 கிலோ மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இதில், 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப் படுகிறது. அத்துடன் கேரள மாநிலம் திருவ னந்தபுரத்தில் உள்ள லால்பகதூர் சாஸ் திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னா லஜி மாணவிகள் வெசாட்’ என்ற செயற் கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஜனவரி முதல் தேதி விண்ணில் பாய்கிறது
Leave a Comment