பெரியார் வருகையை பெருமையுடன் நினைவுகூர்வோம்!

2 Min Read

வைக்கம் சத்தியாகிரகத்தின் பொதுவான பாரம்பரியம் குறித்து பெருமை கொள்ள, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான பல விஷயங் கள் உள்ளன என்பதை ஆரம்பத்திலேயே நான் தெளி வாகக் கூறினேன். ஜாதி அமைப்பு, ஆரிய ஆதிக்கம், பிராமணிய மேலாதிக்கம் ஆகிய தீமைகளை எதிர்த்து வீரத்துடன் போராடிய தந்தை பெரியார் என்று அழைக் கப்படும் ஈ.வெ.ராமசாமி, வைக்கத்தில் நடைபெற்ற வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த சத்தியாகிரக போராட்டத் தில் பங்கேற்க எங்களது மாநிலத்துக்கு வருகை தந்தார் என்ற வரலாற்று உண்மையை கேரளா எப்போதும் பெருமையுடன் நினைவு கூர்கிறது. உடல்நிலை குன்றிய நிலையிலும் போராட்டத்தில் கலந்துகொண்டு இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். வீரம் செறிந்த வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு பிறகு, ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தைப் பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது. வைக்கம் சத்யாகிரகம், தந்தை பெரியாரின் பெருமையை உயர்த்தியதோடு, மற்ற விஷயங்களில் தீர்க்கமான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்ற உத்வேக மூட்டியது.

எங்களோடு தமிழ்நாடு
மறுமலர்ச்சி இயக்கங்கள் குறித்து மிகப்பெரிய பார் வையை மக்களிடத்தில் ஏற்படுத்தியதிலும் வரலாற்று எல்லைகளுக்கு அவற்றை கொண்டு சென்றதிலும் தமிழ்நாடு எங்களுடன் ஒன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வைக்கம் சத்தியாகிரகத்தில் சி.ராஜ கோபாலாச்சாரி, சீனிவாச அய்யங்கார், அய்யா முத்து கவுண்டர் போன்றவர்களின் பங்களிப்பு அந்த போராட் டத்தின்போது ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்குவகித்தது.

வைக்கம் போராட்ட
பாரம்பரியத்தில் முன்னேறுவோம்
இத்தகைய புகழ்பெற்ற போராட்டங்களின் பாரம் பரியத்தை கேரளாவும் தமிழ்நாடும் மக்களுக்காக பகிர்ந்து கொள்கின்றன. வரும் நாட்களிலும், அதேபோன்று புது உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்லவேண்டும். வெவ் வேறு எண்ணங்களை கொண்டோர் பொதுவான ஒரு குறிக்கோளுக்காக, ஒரு பெரிய நோக்கத்திற்காக ஒன் றிணைய முடியும் மற்றும் ஒன்றிணைக்கவேண்டும். எதிர் காலத்திலும் இப்படிப்பட்ட ஒற்றுமை தேவை, அதை சகோதர உறவுகளுடன், உறுதியான சக்திகளுடன் மிகப் பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்பதை வைக்கம் சத்தியாகிரகம் நமக்கு முன்மாதிரியான பாதையை காட்டி யிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *