28.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* மதமும், அரசியலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6200 கி.மீ. ராகுல் நியாய நடைப்பயணம், ஜனவரி 14இல் தொடங்கிட முடிவு.
* “அனைவருக்கும் அனைத்தும்” என்கிற முற்போக்கான சமூகத்திற்கு திராவிட மாடல் அரசு பாடுபட்டு வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* மோடி அரசின் அம்ரித் பாரத் ரயிலில் மற்ற மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை விட இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கான அடிப்படைக் கட்டணம் சுமார் 17% அதிகம் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஆசிரியர்களுக்கு கீதை கட்டாயப் பாடம்: ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தங்கள் அலுவலக நேரத்திற்கு அப்பால் கீதை குறித்த பாடநெறிக்கு வருமாறு கல்லூரி வற்புறுத்துவதாகவும், இந்த நடவடிக்கை ராமானுஜர் கல்லூரி நிர்வாகத்தின் “எதேச்சதிகாரப் பண்பு” என்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment