கரோனா காலத்தில் எடியூரப்பா ஆட்சியில்
ரூபாய் 40 ஆயிரம் கோடி முறைகேடு
பெங்களூர், டிச.27 கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கரோனா காலத் தில் மட்டும் ரூ40,000 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் 1 மாஸ்க் விலை ரூ485-க்கு கொள் முதல் செய்ததாகவும் பாஜக சட்ட மன்ற உறுப்பினர். பசன்கவுடா பாட்டீல் யத்னால் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
கருநாடகா மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த் திருந்தார் சட்டமன்ற உறுப்பினர் யத்னால். ஆனால் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு மாநில பாஜக தலைவர் பதவி கிடைத்தது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் யத்னால். அத்துடன் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திராவுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கரோனா காலத்தில் மட்டும் ரூ40,000 கோடி ஊழல் நடைபெற் றதாகவும் பட்டியல் வெளியிட் டுள்ளார் யத்னால். இது தொடர் பாக பசன்கவுடா பாட்டீல் யத்னால் கூறியதாவது:
கருநாடகாவில் பாஜக ஆட் சியில் ரூ45 மதிப்புள்ள 1 மாஸ்க் ரூ485-க்கு கொள்முதல் செய்யப்பட் டது. கரோனா காலத்தில் படுக் கைகளை வாடகைக்கு எடுத்தனர். மருத்துவமனைகளில் வாடகைக்கு படுக்கைகளை எடுத்து விட்டு வாடகைக்கும் ஒரு தொகை, அதே படுக்கையை கொள்முதல் செய்த தாகவும் ஒரு தொகை குறிப்பிட்டு கொள்ளையடித்தனர். ஒரு படுக் கைக்கு ரூ20,000 என மதிப்பிட்டு கொள்ளையடித்தது எடியூரப்பா குழுவினர். இப்படித்தான் ரூ40,000 கோடி கொள்ளையடித் தனர். இதற்கான அத்தனை ஆதா ரங்களும் என்னிடம் இருக்கிறது. இதற்காக என்னை பாஜகவில் இருந்து நீக்கினாலும் கவலைப்பட மாட்டேன். இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் யத்னால் கூறினார்.
முதலமைச்சர்
சித்தராமையா கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த கருநாடகா முதலமைச்சர் சித்த ராமையா, பாஜக ஊழல் ஆட்சியை நடத்தியது என்பதற்கு அக்கட் சியின் சட்டமன்ற உறுப்பினர் யத்னால் குற்றச்சாட்டுகளே ஆதா ரம். அவரும் போகிற போக்கில் இதை சொல்லாமல் ஆதாரங் களையும் வெளியிட வேண்டும். கரோனா கால ஊழல் தொடர் பான விசாரணை ஆணையத்திடம் இந்த ஆதாரங்களை யத்னால் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பாஜக இந்த பகீர் குற்றச்சாட்டு களால் டில்லி மேலிடமும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம். யத் னாலை சமாதானப்படுத்தும் நட வடிக்கைகளை ஒரு பக்கம் எடியூ ரப்பா தரப்பும் மேற்கொண்டிருப்ப தாகவும் அம்மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.