27.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
• அயோத்தியில், அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள ராமன் கோயில், ஓர் ஆடம்பர கட்டுமானமாக மட்டுமே உலக அரங்கில் இருக்கும்; வேறு எந்த முக்கியத்துவமும் பெறாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
• தேர்தல் வாக்குறுதிப்படி நலத் திட்டங்களை நிறைவேற்றினால், அரசு கஜானா காலியாகி விடும் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு, இவர் என்ன பொருளாதார நிபுணரா? என கருநாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா பதிலடி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
• ஹிந்து மதம் ஒரு மோசடி; உச்ச நீதிமன்றம் கூறியதையே தான் கூறுவதாக சமாஜ்வாடி கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா பேச்சு.
தி இந்து:
• ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் நிழற்படத்துடன் செல்பி பூத் அமைப்பது, வரி செலுத்துவோர் பணத்தை தண்டமாக வீணடிக்கும் செயல். மோடி அரசு சுய விளம்பரம் தேடுவதற்கு எல்லையே இல்லை – என மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்.
• இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி இலக்கில் 5.9%அய் மீறும் வாய்ப்பு உள்ளது என்கிறது இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் அறிக்கை. பட்ஜெட் மதிப்பீட்டை விட சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் செலவினம் அதிகமாகும் என்பதே இதற்குக் காரணம் என்று மதிப்பீட்டு நிறுவனம் கூறுகிறது.
– குடந்தை கருணா