50க்கு வயது மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணி

1 Min Read

சென்னை, டிச. 22- 2023–2024ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக் கையின் போது, நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும். இப் பண்பாடு தொடர்ந்து வருங்காலங் களிலும் செழித்தோங்கவும், மாநி லம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆணை வெளியிட்டது.

சென்னை, மதுரை, கோயம் புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியி லும், காஞ்சிபுரம், திருவண்ணா மலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப் புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, பெரம்பலூர், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக் குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளி லும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மய்யம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட் டுப்புறக் கலைப்பயிற்சி மய்யங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலை களில் ஓராண்டு சான்றிதழ் பயிற் சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத் தப்படவுள்ளது. 25 நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மய்யங்களிலும், ஒரு மய்யத்தில் நான்கு பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்றுநர்கள் என 100 பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000/-மதிப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன.

தகுதியும், திறமையும் 25 ஆண்டு கள் பணி அனுபவம் கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் அல் லது தகுதியும் திறமையும் கொண்ட 50 வயதிற்கு மேற்பட்ட நாட்டுப் புறக் கலைஞர்கள் இப்பணியிடத் திற்கு 5.1.2024-க்குள் விண்ணப்பித் திட வேண்டும்.

பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, விண்ணப்பம் ஆகியவற்றை கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *