21.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட சூழலில் குற்றவியல் திருத்த மசோதாவை மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மோடி அரசு நிறைவேற்றியது.
* மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக ‘இந்தியா’ கூட்டணி முன்னிறுத்துவது வெற்றிக்கு வலு சேர்க்கும், தலையங்க செய்தி.
* நேற்று மக்களவையில் இருந்து மேலும் இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தற்காலிக நீக்கம். எண்ணிக்கை 143ஆக உயர்வு.
* எங்கள் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். ஆனால், ஊடகங்களில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து யாரும் விவாதிக்கவில்லை. அதானி விவகாரம், ரஃபேல் மோசடி, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் நீங்கள் மிமிக்ரி பற்றி விவாதிக்கிறீர்கள். எம்.பி.க்கள் இடைநீக்கம் பற்றி விவாதிக்காமல் வீடியோவுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என ராகுல் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* தேசிய பாதுகாப்பு நலன் கருதி தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், செயற்கைக்கோள் அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கு ஏலமற்ற வழியை வழங்குவதற்கும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் வெளியேற்றப்பட்ட நிலையில், நிறைவேற்றப்பட்டது.
தி இந்து
* குற்றவியல் திருத்த மசோதாவின் சில விதிகளை எதிர்த்து ‘இந்தியா’ கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆலோசனை.
டைம்ஸ் ஆப் இந்தியா
* ஜாதியை மிமிக்ரி நிகழ்வுடன் இணைத்ததற்காக துணைத் தலைவர் தன்கரை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக சாடியுள்ளார். மாநிலங்களவையில் பேசுவதற்கு தனக்கு எப்போதும் வாய்ப்பு மறுக்கப் படுவதாகவும், “தலித்களுக்கு எப்போதும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என்று தான் கூறினால் அது சரியாகுமா? என கார்கே பதிலடி.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment