1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் நினைவிருக் கிறதா தினமலரே?
ஆன்மிகத்தை முதன்மைப் படுத்திதானே – தி.மு.க.வை எதிர்த்து ஆச்சாரியார் தலைமையில் அமைந்த கூட்டணி களத்தில் குதித்தது.
தேர்தல் முடிவு என்னாயிற்று? ஆன்மிகக் கூட்டணிக்கா மக்கள் வாக் களித்து வெற்றி பெறச் செய்தார்கள்?
அந்தத் தேர்தலோடு அரசியலுக்கே முழுக்குப் போட்டு ஆச்சாரியார் முடங் கியது எல்லாம் நினைவில் இல்லையா?
இதுவரை யாம் பெற்றிராத பெரு வெற்றியை அல்லவா தி.மு.க. பெற்றது – அந்தத் தேர்தலில்!
அப்படி என்றால் ஆன்மிகம் தோற்றது என்று ஒப்புக் கொள்வார்களா?
தினமலர் கூட்டம் கூறும் ஆன்மிக மாகட்டும் – கடவுளாகட்டும் – பக்தி யாகட்டும் – அவை எல்லாமே பார்ப் பனீயத்தை மேலே தூக்கிப் பிடிப்பது தானே – அவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதுதானே!
அந்தத் தேர்தலின் போக்கைக் கணித்த தவத்திரு குன்றக்குடி அடி களார் அவர்கள் –
“இன்றைய ஆத்திகம் என்பது சிறுபான்மையினர் நலம், இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம் – உங்களுக்கு எது வேண் டும்?” என்றாரே – இரத்தினச் சுருக்க மாகக் குறள் போல் சொன்னாரே!
குன்றக்குடி அடிகளாரை கடவுள் மறுப்பாளர் பட்டியலில் சேர்க்கப் போகிறார்களா? ‘குடிஅரசு’ இதழைத் துவக்கி வைத்த கடலூர் ஞானியார் அடிகளாரை எந்தப் பட்டியலில் சேர்க்க உத்தேசம்?
சொல்லட்டும் தினமலர் திரிநூல் கூட்டம்!
தினமலரே, பதில் சொல்!
Leave a Comment