சென்னை,டிச.20- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வரு மாறு,
கடந்த 13.12.2023 ஆம் தேதி நாடாளுமன்ற மக் களவைக்குள்- வெடித்து வெளிப்படும் வண் ணப் புகைக் குப்பிகள் வீசப்பட் டன. இதனையொட்டி நாடா ளுமன்ற பாதுகாப்பு ஏற் பாட்டின் படுதோல்வி வெளிப் பட்டது.
கருநாடக மாநிலத்தின் மைசூரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையில், மக்களவை பார்வையாளர் மாடம் சென்று உள் நுழைந்த வர்கள் வண்ணப் புகைக் குப்பிகளோடு சென்றது எப்படி? என்ற வினாவிற்கு இதுவரை விடை கிடைக்க வில்லை.
பாதுகாப்பு ஏற் பாட்டில் ஏற்பட்ட படு தோல்விக்கு யார் காரணம் என் பதை உள்துறை அமைச்சர் நாட் டுக்கு தெரிவிக்க வேண்டும் என அவைத் தலைவர் களிடம் முறையிட்ட நாடாளுமன்ற உறுப் பினர்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டனர்.
நாடாளு மன்ற நடை முறைகளில் அனு மதிக்கப்பட்ட உரிமைகளை பறித்து, ஜன நாயகப் படுகொலை செய்த ஜனநாயக விரோத செயலுக்கு நியாயம் கேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 78 பேர் மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட் டிருப்பது ஏதேச் சதிகாரத்தின் உச்ச கட்டமாகும். சட்ட நெறி முறைகள், ஒப்புக் கொள் ளப்பட்ட ஜனநாயக மாண்புகள், வழிவழியாக பின் பற்றப்படும் மரபுகள் அனைத் தையும் நிராகரிக்கும் மிக மோசமான பாசிச வகைத் தாக்கு தலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்றி, ஆளும் கட்சி மட்டுமே பங்கேற்கும் நாடாளுமன்றத்தை நடத்திட பாஜக அரசு மேற் கொண்டுள்ள முயற்சி ஒரு கட்சி ஆட்சி முறையை மேற்கொள்ளும் பாஜக ஒன்றிய அரசின் சர் வாதிகார செயலை கண்டித்து நாடு ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்து போராட முன் வர வேண்டும் என அறை கூவி அழைக்கிறது.
இவ்வாறு இரா. முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்..