பார்ப்பனர்கள் வீட்டுப் பெண்களுக்கு நடப்பது திருமணம் அல்ல, தானம். இந்த ஆணாதிக்கத்தையும் எதிர்த்துதான் தந்தை பெரியார் காலம் முழுவதும் போராடினார்.
திருமணத்தில் மகளை தந்தை மடியில் அமரவைத்து தாலி கட்டுவது ஆரிய பார்ப்பனர் வழக்கம். தமிழர் வழக்கம் அல்ல. ஏனெனில் தமிழர்கள் தங்கள் மகளை மணமகனுக்கு திருமணம் செய்து கொடுப்பர். ஆனால் ஆரிய பார்ப்பனர் தங்கள் மகளை இன்னொரு பார்ப்பானுக்கு(மணமகன்) தானமாக கொடுப்பர். அவர்கள் செய்வது திருமணம் அல்ல, கன்னிகா தானம். அந்த காலத்தில் ஆரிய பார்ப்பன ஆண்களுக்கு, பெண்கள் மிக மிக குறைவாகவே இருந்தனர். எனவே பெண்கள் மன முதிர்ச்சி அடைந்து ஆண்களை தேர்ந்தெடுக்கும்/ நிராகரிக்கும் நிலை வரக் கூடாது என்பதற்காகவே, அவர்கள் மன முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே குழந்தைப் பருவத்திலேயே பால்ய விவாகம் செய்து வைத்து விடுவர்.
அப்படி ஒரு பெண் குழந்தைக்கு, ஒரு ஆண் குழந்தையையோ, கிழவனையோ திருமணம் செய்து வைக்கும் போது, அந்த சிறுமி பயந்து விடக் கூடாது என்பதற்காக அவளது தந்தையின் மடியில் அமர வைத்து தாலி கட்டுவர். அதாவது அந்த சிறுமி மண வாழ்க்கைக்கு. மனதளவிலும், உடலளவிலும் தயாராகும் வயதுக்கு வருவதற்கு முன்னரே தனது தகப்பனால் (கன்னிகா) தானமாக கொடுக்கப்பட்டு இருப்பாள்.
அப்படி தானமாக கொடுக்கப் பட்டதால் தான் அவளைத் திருமணம் செய்து கொண்டவன் கொஞ்ச நாட்களிலேயே இறந்து போனாலும், அந்த சிறுமியால் பிறந்த வீட்டுக்கு திரும்ப முடியாது. ஏனெனில், தானமாக கொடுத்ததை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது. அதே போல், அந்த சிறுமிக்கு மறுமணம் செய்து வைக்கவும் அவளின் பெற்றோரால் முடியாது. ஏனெனில், தானமாக கொடுத்த பொருளின் மீது, தானம் கொடுத்தவருக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால் தான் கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள். எல்லாம் புகுந்த வீட்டிலேயே, காலம் முழுக்க மொட்டை பாப்பாத்தியாக காலம் தள்ள வேண்டியிருந்தது.
இதை தான் “ஸ்த்ரீ தர்மம்” என காஞ்சிப் போன மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லி பெண்களை அக்ரஹாரத்து அடிமைகளாகவே வைத்து இருக்கும் பார்ப்பனிய சனாதன ஆணாதிக்கத்தை வளர்த்தார்.
இப்படிப்பட்ட பெண் அடிமைத்தனத்தை வளர்க்கும் ஆரிய சனாதன பார்ப்பனியத்தை தான் பெரியார் காலம் முழுக்க எதிர்த்தார். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல், தகப்பன் மடியில் அமர்ந்து, ‘பிராமண’ மேலாதிக்கத்தை வளர்க்கும் ஆண்களுக்கு தானமாக போய்க் கொண்டிருக்கிறார்கள் அக்ரஹாரத்து பொம்மனாட்டிகள்.