நாமும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். அதை எப்படி? யார் மூலம்? என்று தயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரியார் தொண்டறம் அணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சில தூண்டுதல்களைக் கொடுத் திருக்கிறது.
பெரியார் தொண்டறம் அணி யைத் தொடர்ந்து பெரியார் மருத்துவக் குழுமம் முன்னெடுத்த, பெரு வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து சென்னை போரூரில் உள்ள, Vitacura Pharmaceuticals, Laso healthcare pvt ltd ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலை மைப் பொறுப்பில் இருக்கும் விக்னேஷ் (Mr. Vignesh P.L) தனது சந்தைப்படுத்தும் மேலாளர் (Marketing Manager) உமாசங்கரிடம் தனது விருப்பத்தை பகிர்ந்து கொண்டதை, உமாசங்கர் தனது நண்பரான, சென்னை இராமச்சந்திரனிடம் தெரிவித்திருக்கிறார்.
இராமச்சந்திரன் பெரியார் தொண்டறம் அணியில் தான் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படித்தான் Vitacura Pharmaceuticals, Laso healthcare pvt ltd நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர் விக்னேஷ், தனது நிறுவனத்தின் மேலாளர் உமா சங்கர் மூலம் பெரிய மதிப்பிலான மருந்துகளை பெரியார் மருத்துவக் குழுமத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
செய்த உதவியை சொல்லிக்காட்ட விரும்பாமல் அனுப்பிய மருந்துகளின் மதிப்பை தெரிவிக்க மறுத்து விட்டார் விக்னேஷ். Vitacura Pharmaceuticals, Laso healthcare pvt ltd இந்த இரண்டு நிறுவனங்களும் மருந்துகளை உற்பத்தி செய்து, முழுக்க முழுக்க ஏற்றுமதி செய்து வருகிற நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.