மதுரை, டிச. 17- புகழ்பெற்ற நாகஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்– பொன் னுச்சாமி சகோதரர்கள் இணைந்து வழங்கிய இசைச்சாரல் என்பது உலகத் தமிழர்களின் மத்தியில் நற்புகழ் பெற்றது.
அச்சகோதரர்களில் ஒருவரான எம்.பி.என்.பொன்னுச்சாமி மதுரை விசாலாட்சி நகரில் இயற்கை எய்தினார். நல்லடக்கம் (28-.11.-2023) முடிவடைந்த நிலை யில் 29.-11.-2023 மாலை தலைமை கழக அமைப்பாளர் வே. செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந் தம், நா.முருகேசன் ஆகியோர் இல்லம் சென்று குடும்பத்தினரை சந்தித்து தமிழர் தலைவர் அவர்க ளின் விடுதலை இரங்கல் அறிக் கையை வழங்கி கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்து உரை யாடினர்.
அய்யா அவர்களின் நாகஸ்வர வாசிப்பை மகிழ்ந்து இரசிக்கும் தமிழர் தலைவர் அவர்களையும் தமிழர் தலைவரிடத்தில் எம்பிஎன்பி அவர்கள் கொண்ட அன் பையும் எடுத்துக்கூறி பகிர்ந்து கொண்டனர்.
டாக்டர் பட்டம் பெற்ற தமிழர் தலைவர் அவர்க ளுக்கு மதுரையில் பாராட்டு விழா வர்த்தகப் பேரவை அரங்கில் நடைபெற்றபோது தமிழர் தலைவர் அவர்கள் விருப் பப்படி பொன்னுச்சாமி அவர் களின் நாகஸ்வர இசைமழையோடு விழா தொடங்கியது.
தமிழர் தலைவர் அவர்கள் அரங்கத்தில் நுழையும்போது எம்.பி.என்.பொன்னுச்சாமி அவர்கள் புரட்சிக்கவிஞரின் பாடலான துன்பம் நேர் கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்ற பாடலை இசைக்க மேடையின் கீழே அமர்ந்து ஆசிரியர் அவர்கள் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கேட்டு விழா மேடையில் பொன் னாடை அணிவித்து பாராட்டிய தையும், பெரியார் திடலுக்கு அழைத்து பாராட்டியதையும் பல் வேறு நேரங்களில் சந்திக்கும் போது மகிழ்ந்து நினைவு கூர்ந்ததையும் குடும்பத் தினர் உரையாடலில் பதிவு செய் தனர். கழகப் பொறுப்பா ளர்கள் குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தனர்.