சென்னை,டிச.16- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது;
“நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி பற்றி பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அறிக்கை தர வேண்டுமெனக் கோருவது குற்றமா?அந்தக் கோரிக்கையை வலியுறுத்திய உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதுதான் வியப்பை அளிக்கிறது. நாடாளுமன்றத்தை நடத்துவது அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தை முடக்குவது, ஒத்தி வைப்பது தான் அரசின் நோக்கமாகத் தெரிகிறது’ என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு