ஆசிரியர் பணிக்கு உச்சவரம்பு வயது 58 தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

2 Min Read

சென்னை, அக். 23 – தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி யில் சேருவதற்கான வயதுவரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசா ணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கத் தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆசிரியர்களின் போராட்டத் திற்குப் பிறகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில் ஆசிரியர் பணி யில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதன்படி, ஆசிரியர் பணியில் சேர் வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என்று அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரி யர்களை நேரடி நிர்ணயம் செய்வ தற்கான உச்ச வயது வரம்பானது தற்பொழுது மாற்றப்பட்டு அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுப்பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 எனவும், இதர பிரிவினர் 58 வயதாகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசின் செயலாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணையை வெளியிட்டுள்ளார். முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் வயதுவரம்பு இருந்தது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிவிட் டர் பதிவில் அரசாணையை பதி விட்டு குறிப்பிடுகையில், 4.10.2023 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க அரசுப் பள் ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந் தோம். 

அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற் போது அரசாணையையும் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆசிரியப் பெருமக்க ளின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *